For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்ய பிரதமர் மிகாயலுக்கு கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்தப்பட்டார்.. அதிபர் புடின் அவசர ஆலோசனை!

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன் குணம் அடைந்தார். இந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

Russian Prime Minister Mikhail Mishustin tested positive for COVID-19

இது தொடர்பாக தற்போது மிகாய்ல் மிஷுஸ்டின் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனால் தற்போது தன்னுடைய பணியில் இருந்து தற்காலிமாக ஒதுங்கி இருக்க போவதாக பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் அறிவித்துள்ளார்.

அதோடு தற்போது மிகாய்ல் மிஷுஸ்டின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ் அங்கு பிரதமரின் பணிகளை கவனித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் அதிபர் புடினுக்குத்தான் பிரதமரை விட அந்நாட்டில் அதிக அதிகாரம் உள்ளது. ஆனால் பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின்தான் அந்நாட்டு பொருளாதாரம் குறித்து கவனித்துக் கொண்டு இருந்தார். அந்நாட்டில் கொரோனா காரணமாக பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை.. ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் தருகிறது.. அமெரிக்க கொரோனா சோதனையில் முடிவு.. கேம் சேஞ்சர்நம்பிக்கை.. ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் தருகிறது.. அமெரிக்க கொரோனா சோதனையில் முடிவு.. கேம் சேஞ்சர்

இந்த நிலையில் தற்போது பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. இவர் இடைப்பட்ட காலத்தில் அதிபர் புடினை சந்தித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Recommended Video

    கொரானா தடுப்பூசி போட்டு பார்க்கிறது அமெரிக்கா

    இந்த நிலையில் அதிபர் புடின் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் பிரதமருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதும் உறுதியாகவில்லை. ரஷ்யாவில் கொரோனா காரணமாக 106,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1075 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    English summary
    Russian Prime Minister Mikhail Mishustin tested positive for COVID-19 today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X