குளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்!
குளியல் தொட்டிக்குள் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தார்
Recommended Video
மாஸ்கோ: செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு... குளியல் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கிய பெண் ஷாக் அடித்து உயிரிழந்தார்.
ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக். இங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 26 ஆகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல குளிப்பதற்காக என்ஜினியா பாத்ரூமுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த குளியல் தொட்டி அருகிலேயே தன்னுடைய செல்போனுக்கு சார்ஜர் போட்டிருந்தார்.
மற்றொரு பக்கம் குளியல் தொட்டியில் தண்ணீர் முழுசுமாக நிரப்பி விட்டு, என்ஜினியா அதற்குள் குளிக்க இறங்கினார். அந்த சமயம் பார்த்து போன், வழுக்கி.. அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. இதில் அந்த தொட்டிக்குள் பாய்ந்த கரண்ட், என்ஜினியாவின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
குளிக்க போன மகளை ஒரு மணி நேரம் ஆகியும் காணவில்லையே என்று அவருடைய அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு பாத்ரூமுக்குள் சென்று பார்த்தபோதுதான், மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலறி துடித்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் மூலம் கரண்ட் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் மாஸ்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications