டிரம்ப் என்ட்ரியால் புதின் - ஜி ஜின்பிங் திடீர் மீட்டிங்.. ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன? பின்னணி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் திடீரென்று காணொலி மூலம் அவரச மீட்டிங் நடத்தி உள்ளனர். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலையில் இருதலைவர்கள் மீட்டிங் நடத்தி விவாதித்தன் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் நேற்று முன்தினம் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்றார். ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக 4 ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். 2017 முதல் 2021 ஜனவரி மாதம் வரை அவர் அந்த பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் 2வது முறையாக அமெரிக்க அதிபராகி உள்ளார்.

vladimir putin xi jinping russia

அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் டொனால்ட் டிரம்ப் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்படும். இதன்மூலம் அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவோம் என்று கூறினார். இது பல நாடுகளை கலங்கடிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி உலகில் உள்ள பிற வல்லரசு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு என்பது அமெரிக்காவுடன் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவை தாக்கும் வகையில் உக்ரைனுக்கு ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி உள்ளது.அதேபோல் சீனாவுடன் தற்போது டிக்டாக் விவகாரத்தில் மோதல் உள்ளது. டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் டிரம்ப். இதுதவிர சீனாவுக்கும் அதிக வரிகளை டிரம்ப் விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு நேற்று திடீரென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாடினர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவு என்பது பலமாக தொடங்கியது. அதோடு ரஷ்யாவின் கச்சா எண்ணெய், கேஸ் வாங்கி வருகிறது.

இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் காணொலி மூலம் உரையாடி உள்ளார். இவர்கள் 2 பேர் இடையேயும் மொத்தம் ஒன்றரை மணிநேரம் வரை இந்த காணொலி காட்சியின் மூலம் உரையாடல் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றுள்ளது பற்றியும், அவருக்கும் இருநாடுகள் இடையேயான உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த உரையாடலின்போது விளாடிமிர் புதின், ‛‛ இருநாடுகள் இடையேயான உறவு என்பது பகிரப்பட்ட நலன், பரஸ்பர புரிதல், நன்மைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்க வேண்டும். இது சர்வதேச அரசியலை சார்ந்து இருக்க கூடாது. நாங்கள் அமைதியான பன்முக உலகலாவிய சூழலை உருவாக்க நினைக்கிறோம். அதனை ஆதரிக்கிறோம். யூரேசியாவிலும் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடுகிறோம்" என்று கூறினார்.

இதை கேட்ட ஜி ஜின்பிங், "சீன-ரஷ்ய உறவுகளை இன்னும் உயர் நிலைக்கு எடுத்து செல்லவும், வெளிப்புறத்தில் இருந்து வரும் அழுத்தங்களை சமாளிக்கவும் நாங்கள் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்'' என்றார். இதுதவிர இருதலைவர்களும் அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எவ்வளவு எதிர்கொள்வது பற்றி விவாதித்துள்ளனர்.

இதுபற்றி விளாடிமிர் புதினின் வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறுகையில், ‛‛புதின் - ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை என்பது முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று தான். இதனை டிரம்பின் பதவியேற்புடன் இணைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவுடன் எங்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளன. அமெரிக்கா இடையேயான உறவு பற்றி இருதலைவர்களும் விவாதித்தனர். அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா தயாராக உள்ளது'' என்றார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அதோடு அமெரிக்காவுடன் நேர்மறையான உறவுக்கு தயாராக இருப்பதாக அறிவித்தார். அதேபோல் விளாடிமிர் புதினும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற போதும், நேற்று முன்தினம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதும் வாழ்த்து தெரிவித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+