பேக் சைடில் தாக்கிய சுறா.. தப்பிப் பிழைத்த சர்ஃப் வீரர் மிக்- வைரலாகும் “சர்ஃப் ஹீரோ” வீடியோ
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் மிகப் பிரபலமான சர்ஃப் வீரர் மிக் சுறாவிடம் போராடி உயிர் பிழைத்த திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அனைவராலும் வைரலாகப் பரவி வருகின்றது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிக் பேஃனிங். தொழில்முறை சர்ஃப் வீரரான மிக், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜே பே ஓபன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

ராட்சத அலைகளுக்கு வெயிட்டிங்:
நேற்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மிக், கடலில் ராட்சத அலைகள் தோன்றுவதற்காக தனது சர்ஃப் மிதகையில் காத்துக் கொண்டிருந்தார்.
மிக்கை தாக்கிய சுறா மீன்:
அப்போது பின்னால் இருந்து திடீரென ஒரு ராட்சத சுறா மிக் பேஃனிங்கை தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மிக், பிறகு சுதாரித்துக் கொண்டு சுறாவை பலமாக தனது கைகளால் தாக்கினார்.

மீட்புப் படையினரால் மீட்பு:
இதனால் அவரை சுறா விட்டுச்சென்றது. இதனையடுத்து விரைவுப் படகில் வந்த மீட்பு படையினர் மிக்கை பத்திரமாக மீட்டனர்.

போராடி உயிர்பிழைப்பு:
இது குறித்து மிக் பேஃனிங் கூறுகையில், "சர்ஃப் மிதகையில் நான் அமர்ந்து இருந்தேன். அப்போது எனது காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை ஏதோ ஒன்று கடிப்பது போல உணர்ந்தேன். திரும்பி பார்த்த போது சுறா. இருப்பினும் அதனோடு போராடி உயிர்பிழைத்தேன்" என்றார்.

நீங்கதான் ரியல் ஹீரோ மிக்:
இதுகுறித்து டுவிட்டியுள்ள தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், "மிக் நீங்கள்தான் என்னுடைய புதிய ஹீரோ" என்று தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தாக்கும் சுறாக்கள்:
தென் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சர்பிஃங் செய்யும் வீரர்கள் அடிக்கடி சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications