வெட்டுக்கிளியை ரசித்து ருசித்து சாப்பிடும் ஹாலிவுட் நடிகை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் கவர்ச்சி நடிகை சல்மா ஹாயக் ஒரு வெட்டுக்கிளியை நறுச் நறுச் என்று சாப்பிடும் வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.

மெக்சிகோவில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் சல்மா ஹாயக். சல்மா பெயரைக் கூறியதுமே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சியான உடல்வாகு தான். 48 வயதாகியும் ஒரு குழந்தைக்கு தாயாகியும் சல்மா இன்றும் இளமை குறையாமல் சிக்கென்று உள்ளார்.

Salma Hayek shocks fans as she eats a huge crunchy CRICKET on camera

என்ன சல்மா அப்படியே இருக்கிறீர்கள் ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்டால், என்னால் ஊசி போட்டு, மாத்திரை சாப்பிட்டு, அறுவை சிகிச்சை செய்து எல்லாம் அழகை பாதுகாக்க முடியாது. நான் அதிகபட்சமாக க்ரீம்கள் பயன்படுத்துகிறேன். என் அழகை பாதுகாக்க நான் செய்வது அவ்வளவு தான் என்கிறார்.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வெட்டுக்கிளியை வாயில் போட்டு நறுச்சென்று கடித்து சாப்பிடுகிறார். அவர் ரசித்து தான் சாப்பிடுகிறார். ஆனால் பார்ப்பவர்களுக்கு தான் குமட்டிக் கொண்டு வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நாக்கில் வெட்டுக்கிளியை வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வகை வகையான பூச்சிகளை சாப்பிடுவது என்றால் அவ்வளவு பிடிக்குமாம். பூச்சிகள் பெயரைச் சொன்னால் நாம் முகத்தை சுளிப்போம் அவருக்கு நாக்கில் எச்சில் ஊறுகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+