சிங்கப்பூரில் நடந்த 'சட்டமும் நீங்களும்' கருத்தரங்கு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் 22-09-2013 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "சட்டமும் நீங்களும்" இலவச கருத்தரங்கு சிங்கப்பூர் வில்கி சாலையில் அமைந்துள்ள கப்லன் உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான நாவரசர் திரு ஆர். கலாமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். முதலாளி தொழிலாளி உறவு, வர்த்தக முறைகள், சாலை விபத்து, வேலையிட விபத்து, கடன் விதிமுறைகள், உத்தரவாதக் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை விளக்கினார். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், வழக்கறிஞர் திரு கலாமோகனுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். துணைச்செயலாளர் அப்துல் நஜீர், துணைப்பொருளாளர் அப்துல் மாலிக் நினைவுப்பரிசுகளை வழங்கினர்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் பொது செயலாளரும், சிங்கப்பூர் தமிழர் பேரவையின் துணைத் தலைவருமான தமிழாசிரியர் திரு மு. அ. மசூது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினருக்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜா சேக் அலாவுதீன் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.

Sattamum Neengalum, seminar held in Singapore

சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் தலைவர் திரு ஆர். நாராயணமோகன் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். எழுத்தாளர் ஷாநவாஸ் அப்துல் காதர் இக்கருத்தரங்கை வழி நடத்தினார். பொதுமக்களும், வெளிநாட்டுத் திறனாளர்களும், ஊழியர்களும் இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+