உலகையே திரும்பி பார்க்க வைத்த சவுதி.. வேல்யூ மட்டும் பல ஆயிரம் கோடி! பிரம்மாண்டத்தின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: வளைகுடாவில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருக்கிறது. இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை சவுதி வெளியிட்டுள்ளது. இஸ்லாதத்தின் புனித நகரான மதீனாவுக்கு அருகே சவுதி பொருளாதாரத்தையே புரட்டி போடும் கண்டுபிடிப்பு நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

சவுதி அரேபியாவின் மதீனா பகுதியில் சுமார் 11 கோடி டன் தாது பொருட்களில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதீனாவில் உள்ள ஜபல் சயீத் திட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த கண்டுபிடிப்பு தெரிய வந்துள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Saudi Arabia Uranium Middle east

ரேர் எர்த் மெடல்கள்

ஜபல் சயீத் பகுதியில் கிடைக்கும் தாதுக்களில் ரேர் எர்த் மெடல்கள், குறிப்பாக ஹெவி ரேர் எதிர்த் மெடல்கள் கனிமங்கள் அதிக செறிவில் இருப்பதாகவும், அதே பகுதியில் யுரேனியமும் கூட கணிசமான அளவுக்கு இருப்பதாகவும் அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் கூறியுள்ளார்.

அந்த பகுதியில் சுமார் 110 மில்லியன் டன் தாது பொருட்கள் இருப்பது சவுதி மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.. இதில் விஷயமே ரேர் எர்த் மெடல்களுடன் யுரேனியம் இருப்பதும் தான். ஏனென்றால் யுரேனியம் அணுசக்தி உற்பத்தியில் முக்கியமான மூலப்பொருளாகும். மதீனா பகுதியில் இருக்கும் இந்த யுரேனியம் சவுதியின் எதிர்கால அணுசக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா

வளைகுடாவில் மிக பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் சவுதி அரேபியா, நீண்ட காலமாக தனது பொருளாதாரத்திற்கு கச்சா எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பி இருந்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் தேவை சர்வதேச அளவில் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தனது பொருளாதாரத்தை பலதரப்படுத்த சவுதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காகவே விஷன் 2030 திட்டத்தை சவுதி செயல்படுத்துகிறது. அதன் கீழ் எரிசக்தி மற்றும் கனிம வளங்களை பல்வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், உள்நாட்டிலேயே யுரேனியத்தை பிரித்தெடுப்பது மற்றும் அணுசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது ஆகியவையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தான் மதீனாவில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முக்கியமான காலகட்டம்

மேலும், இந்த கண்டுபிடிப்பு என்பது அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே அணுசக்தி தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நேரத்தில் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் சவுதியின் அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கு உதவ உள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவுக்கு தனது சொந்த நாட்டிலேயே யுரேனியத்தை செறிவூட்டும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதே இப்போது போருக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால், அமெரிக்காவுடன் சவுதி ஒப்பந்தம் போட்டுள்ளதால் யுரேனியத்தை செறிவூட்ட ஓகே சொல்லி இருக்கிறார்கள்.

மதீனாவில்

மேலும், இஸ்லாமியர்களின் புனித நகரங்களாக மெக்கா மற்றும் மதீனா இருக்கும் நிலையில், அதில் ஒன்றில் இந்த யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு 622ம் ஆண்டு இடம்பெயர்ந்ததாக வரலாறு கூறுகிறது. பின்னர் மதீனா இஸ்லாத்தின் முக்கியமான மையமாக உருவானது. இந்நிலையில் புனித நகரம் அமைந்துள்ள பகுதியில் மிக பெரிய அளவில் யுரேனியம் மற்றும் அரிய கனிமங்கள் அடங்கிய தாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் எண்ணெய் வளத்தை தாண்டி புதிய எரிசக்தி வளங்களை உருவாக்க சவுதி முயன்று வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பையும் மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் யூரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சவுதியின் எதிர்காலத்தையே மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+