புது மனைவியின் பையில் சிகரெட்: விவாகரத்து கேட்டு ஒற்றைக் காலில் நிற்கும் சவூதி வாலிபர்
துபாய்: சவூதியில் திருமணமான 3 மாதம் கழித்து மனைவியின் கைப்பையில் சிகரெட்டை பார்த்த கணவர் அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு அடம்பிடிக்கிறார்.
சவூதியில் உள்ள ஜிசான் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் அண்மையில் தனது மனைவியின் கைப்பையில் சிகரெட் இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவர் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தான் புகைப்பிடிக்கவில்லை என்றும், பையில் இருந்தது தன்னுடைய சிகரெட் இல்லை என்றும் அந்த பெண் எவ்வளவோ கூறியும் அவர் அதை கேட்கவில்லை.
மேலும் அந்த நபரின் மனதை மாற்றும் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. கைப்பையில் இருந்த சிகரெட் தன்னுடைய மனைவியுடையது தான் என்று அந்த நபர் ஆணித்தரமாக நம்புகிறார்.
சவூதி அரேபியாவில் சுமார் 6 லட்சம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாம். மேலும் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட பதின்வயதினர் 8 லட்சம் பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாம்.
கணவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து அதனால் பாதிக்கப்படும் பெண்கள் விவகாரத்து கோரலாம் என்று சவூதி நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications