மருத்துவ உலகின் புரட்சி: ‘எந்திரன்’ ஸ்டைலில் மூளை இல்லாமல் பூமிக்கு வந்த புதிய மனிதன் ‘ரெக்ஸ்’
வாஷிங்டன்: எந்திரன் படத்தில் ‘சிட்டி'யை அறிமுகப் படுத்தி, விஞ்ஞானி ரஜினி வசீகரன் பேசும் போது, இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா என்ற ஆச்சர்யம் தோன்றியிருக்கும். ஆனால், தற்போது அதனை மெய்யாக்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மருத்துவ உலகின் புரட்சியாக மனித உடலில் பாதிக்கப் பட்ட பாகங்கள் பலவற்றிற்கு செயற்கையான முறையில் கருவிகள் வைத்து இயக்கப் படுகின்றன. அத்தகைய செயற்கை உடற்கருவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஓர் உருவம் தந்தால் எப்படி இருக்கும் என்ற விஞ்ஞானிகளின் கற்பனைக்கு கிடைத்த வடிவம் தான் ‘ரெக்ஸ்'.

புதிய மனிதன் ‘ரெக்ஸ்’....
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள, செயற்கை உடல் உறுப்புகளால் ஆன மனிதனுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் தான் ‘ரெக்ஸ்'.

ஆறடி மனிதன்...
மூன்று மாத கால அவகாசத்தில் 17 நிறுவனங்கள் வழங்கிய உடல் உறுப்புகளைப் பொருத்தி உருவாக்கப் பட்ட ரெக்ஸ் ஆறடி உயரம்.

பெர்டாய்ட் மியேர்...
எந்திரனில் சிட்டியின் முக அமைப்பு, விஞ்ஞானி வசீகரனை ஒத்திருப்பது போல, ‘ரெக்ஸ்'ன் முக அமைப்பு சூரிச் பல்கலைக் கழக உளவியலாளர் பெர்டாய்ட் மியேரை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

செயற்கை உறுப்புகள்....
பாதிக்கப் பட்ட நோயாளிக்கு பொருத்தப் படும் உடல் பாக அமைப்பைப் போன்றே நுரையீரல், சிறுநீரகம், மண்ணீரல், கணையம் போன்றவை செயற்கையாக ரோபோடிக் இயந்திர முறையில் ரெக்ஸுக்கு பொருத்தப் பட்டுள்ளது.

செயற்கை ரத்தம்...
செயற்கை இதயம் மூலம் செயற்கை ரத்தம் உடல் முழுவதும் எல்லா பாகங்களுக்கும் சென்று வருவதற்கு வசதியாக ‘பம்பிங்' செய்யப் அடுவது இதன் சிறப்பம்சம்.

செயற்கைக் கண்கள்...
செயற்கைக் கண்கள் செயல்பட விழித்திரையில் ‘மைக்ரோசிப்'புடன் இணைந்த கேமரா, அணிந்திருக்கும் கண்ணாடி வழியே காட்சிகளைப் படம் பிடித்து அனுப்புகிறது.

டயாலிசிஸ்...
சிறுநீரகம் இயக்குவதற்காக ‘டயாலிசிஸ்' சுத்திகரிப்புச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இது மற்ற உறுப்புகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது தான் முக்கிய விஷயம்.

மனிதனைப் போலவே....
கைகளின் இயக்கம் கிட்டத்தட்ட சராசரி மனிதனின் அசைவைப் போலவே இருக்கிறது எனச் சொல்லி வியக்கிறார்கள் ரெக்ஸ்-ஐ பார்த்து செல்லும் பொதுமக்கள்.

உடல் இயக்க செயல்பாடுகள்....
அதேபோல் ரெக்ஸின் உடல் இயக்க செயல்பாடுகளும் ஏறக்குறைய 60-70 சதவீதம் மனிதனைப் போலவே அமைந்துள்ளதாம்.

மூளை இல்லை....
ஆயினும், செரிமான அமைப்பு, கல்லீரல், தோல் போன்ற பாகங்கள் இல்லை. அதேபோல், மிக முக்கியமாக உணர்வுகளைத் தூண்டி செயல் பட வைக்கும் மூளையும் இல்லாதது தான் சராசரி மனிதர்களிலிருந்து ரெக்ஸை வித்தியாசப் படுத்துகிறது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications