''சர்வரோக நிவாரணி” ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு: மருத்துவ உலகின் மைல்கல்!
வாஷிங்டன்: மருத்துவ உலகில் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது.
இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து மிகவும் நம்பிக்கையளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகள் பழமை:
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.

மருத்துவத்தின் மைல்கல்:
இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

பயன்பாட்டுக்கு வரவில்லை:
1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

தகவைமைத்த உயிரிகள்:
இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன.

எலும்புருக்கி நோய்:
உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புருக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.

மண்ணிலேயே ஆய்வு:
இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மச்சுசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.

ஆய்வகமான மண்:
மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும். எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

நிலத்தடி விடுதி அமைப்பு:
இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

பிரிந்திருந்த பாக்டீரியங்கள்:
இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.

தோண்டியெடுத்து ஆராய்ச்சி:
சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.

எதிர்வினை வேதிப்பொருட்கள்:
அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை மற்றும் தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர்.

ஆண்டிபயாடிக் மூலக்கூறுகள்:
இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதன்மூலமாக பல்வேறு நோய்களுக்கு மருந்தினை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications