2020 மோதப் போகிறதா விண்கல்? - தடுக்கும் முயற்சியில் இறங்கப்போகும் விஞ்ஞானிகள்!
வாஷிங்டன்: பூமியின் மீது எதிர்காலத்தில் விண்கல்லொன்று மோதுவதால் ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் வகையில் அந்த விண்கல்லின் பயணப்பாதையை மாற்றுவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஆரம்ப கட்டமாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்கற்கள் மீது விண்கலமொன்றை மோதவிட்டு அவற்றின் பயணப் பாதையை மாற்ற முடியுமா என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அயிடா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து 160 மீட்டர் மட்டுமே அகலமுடைய டி.டி.மூன் என்றழைக்கப்படும் முட்டை வடிவான விண்கல்லின் பயணப்பாதையை மாற்றுவது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் பரிசோதனை முயற்சிக்காக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு விண்கலங்கள் ஏவப்படவுள்ளன. அவற்றில் ஒரு விண்கலம் குறிப்பிட்ட விண்கல்லுடன் மோதும் போது மற்றொரு விண்கலம் அந்த நிகழ்வின் விளைவைப் படம் பிடிக்கவுள்ளது.
இது தொடர்பான விவரங்கள் பிரான்ஸின் நன்டெஸ் நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய கோள்மண்டல விஞ்ஞான கூட்டத்தில் விஞ்ஞானிகளால் விவரிக்கப்பட்டது. அதேசமயம் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் டிடிமூன் விண்கல்லையும் மற்றைய 750 மீட்டர் அகலமான டிடிமொஸ் விண்கல்லையும் திசைதிருப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications