எகிப்து பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளின் படிமம்.. குழம்பிப்போன ஆய்வாளர்கள்!
கெய்ரோ: பழங்கால படிமங்கள் அனைத்தும் நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றன. அந்த வகையில், எகிப்து நாட்டின் பாலைவனப்பகுதியில் இருந்து முதலையின் படிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
பாலைவனத்தில் எப்படி முதலை வாழ்ந்திருக்கும்? என்கிற கேள்வி விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தினாலும், இந்த படிமங்கள் கடல் முதலையினுடையது என்று சொல்லப்படுவதுதான் அதைவிட ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. கடலில் முதலைகளால் வாழ முடியாது. தற்போது இருக்கும் உப்பு நீர் முதலைகள் கடலில் 100 கி.மீ வரை கூட வேட்டையாடும் என்றாலும், அது நிரந்தரமான கடல்வாழ் உயிரி கிடையாது. இனப்பெருக்கத்திற்கும், முட்டையிடுவதற்கும் அது கரைக்கு வந்தாக வேண்டும். ஆனால் எகிப்து பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலை முழுக்க முழுக்க கடல்வாழ் உயிரினமாகும்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும், இந்த மாற்றம் காரணமாக கடல்கள் இடம் பெயர்கின்றன என்றும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் எகிப்து கடல் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், பின்னர் கடல் வேறு பகுதிக்கு மாறியதால், எகிப்து பாலைவனமாக மாறியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படியாகத்தான் சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து கடல் பகுதியில், கடல் நீர் முதலை வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த முதலைகள், தற்போது நாம் பார்க்கும் முதலைகள் போன்று வடிவமைப்பை கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க மீன் போல கடல் நீரிலேயே வாழ்வதற்கான அனைத்து அம்சங்களையும் பெற்று, முழு நேரமும் கடலிலேயே வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
டைனோசர்கள் அழியும் கொஞ்ச காலத்திற்கு முந்தைய காலத்தில்தான் இந்த முதலைகள் வாழ்ந்து வந்ததாகவும், இப்போது இந்த வகையான முதலைகளே கிடையாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை ஆய்வு செய்யும்போது, முதலைகளின் பரிணாம வளர்ச்சி நாம் கணித்ததற்கு முன்பிருந்தே நடந்திருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள், உலகம் எப்படி உருவானது, எந்தெந்த கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள உதவும். அதன் மூலம், உலகம் தற்போது எதை நோக்கி பயனித்துக்கொண்டிருக்கிறது? என்பதையும் அறிந்தக்கொள்ள உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications