சுற்றிலும் கடல்.. சுகமான தீவு.. அள்ளும் அழகு.. உலகின் டாப் 10 ஏர்போர்ட்ஸ்
சமீப காலமாக வானிலை காரணம், விமானத்தில் கோளாறு என தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்கள் தலைப்புச் செய்திகளாக மாறி இருக்கின்றன. ஆனால், அதிலிருந்து மாறுபட்ட ஒரு அழகான செய்தியைத்தான் நாம் இப்போது பட்டியல் போடப் போகிறோம். அது என்ன? உலகில் உள்ள மிகவும் அழகான டாப் 10 விமானநிலையங்கள் எவை? அது பற்றிய தொகுப்புதான் இது. சமீப காலமாக வானிலை காரணம், விமானத்தில் கோளாறு என தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்கள் தலைப்புச் செய்திகளாக மாறி இருக்கின்றன. ஆனால், அதிலிருந்து மாறுபட்ட ஒரு அழகான செய்தியைத்தான் நாம் இப்போது பட்டியல் போடப் போகிறோம். அது என்ன? உலகில் உள்ள மிகவும் அழகான டாப் 10 விமானநிலையங்கள் எவை? அது பற்றிய தொகுப்புதான் இது.
இந்த அழகான பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு விமானநிலையம் கூட இடம்பெறவில்லை என்பது கொஞ்சம் மன வருத்தம் தருகிறது. டாப் 10 பட்டியலில் முதல் இடம் எந்த நாட்டு விமான நிலையத்திற்கு? அதற்கு முன்பாக பத்தாவது இடம் எது என்பதைப் பார்ப்போம்.

பத்தாவது இடம்: பிரான்சில் உள்ள கோர்செவெல் அல்டிபோர்ட் நிலையத்திற்குத்தான். இங்கு தென்படும் ஆல்பைன் இயற்கைக்காட்சி காண்பவர்களை மூச்சடைக்க வைத்துவிடும். சவாலான குறுகிய ஓடுபாதைகளைக் கொண்டது. ஆல்ப்ஸின் அழகிய காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தச் செய்கின்றன
ஒன்பதாவது இடம்: டென்வர் சர்வதேச விமான நிலையம். இது மேற்கு அமெரிக்காவில் உள்ளது. கொலராடோவின் பெருநகரமான டென்வருக்கு இங்கிருந்து பிரதான சேவை தொடங்குகிறது. மொத்தம் 33,531 ஏக்கர். கிங் ஃபஹத் நிலையத்திற்கு அடுத்து உலகில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையம் இதுதான்.

எட்டாவது இடம்: வெலிங்டன் விமான நிலையம். இங்கு இப்போதும் கழுகுகள் மற்றும் Gandalf சுற்றித் திரிகின்றன. இது நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள ரோங்கோட்டையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஏர் நியூசிலாந்து, சவுண்ட்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்களின் விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதைச் சிறிய விமான வணிகங்களின் தாயகம் என்கின்றனர்.
ஏழாவது இடம்: ஹமாத் சர்வதேச விமான நிலையம். இது கத்தாரில் உள்ளது. இங்கிருந்துதான் கத்தார் ஏர்வேஸ் செயல்படுகிறது. இது மத்திய கிழக்கின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று.

ஆறாவது இடம்: ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம். அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் இயக்கி வருகிறது. இத மொத்த நிலப்பரப்பு 4,700 ஏக்கர். ஐந்து ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.
ஐந்தாவது இடம்: ஹாங்காங் சர்வதேச விமான நிலையம். இது மேற்கு ஹாங்காங்கில் உள்ள செக் லேப் கோக் தீவில் உள்ளது. இதை செக் லேப் கோக் என்று சொல்கிறார்கள். இதைச் சுற்றியும் தீவுபோல் கடல்நீர் சூழ்ந்துள்ளது. அதனால், எப்போதும் இயற்கை அழகுடன் மிளிர்கின்றது.
நான்காம் இடம்: கன்சாய் சர்வதேச விமான நிலையம் இருப்பது ஜப்பானில். என்னதான் முதல் இடத்தை ஜப்பான் பிடித்திருந்தாலும் இந்த கன்சாய்க்கு என்னவோ கிடைத்துள்ளது நான்காவது இடம்தான். இது கிரேட்டர் ஒசாகா பகுதியில் உள்ளது. இதுவும் சர்வதேச விமான நிலையம்தான். ஒசாகா, கியோட்டோ, கோபி ஆகிய நகரங்கள் இதன் அருகில் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால், இது ஒசாகா விரிகுடாவின் நடுவில் உள்ள ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளது. ஆகவே, அழகு அப்படியே அள்ளும்.

மூன்றாம் இடம்: மூன்றாவது கிங் அப்துல்அஜிஸ் விமான நிலையம். தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு இந்தப் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், இது இருப்பது சவுதி அரேபியாவில்தான். அங்கே தமிழர்கள் அதிகம் உள்ளனர். இதை ஜெட்டா விமான நிலையம் என்றும் சொல்வார்கள். ஜெட்டா, மெக்கா ஆகிய நகரங்களுக்குச் சேவை செய்யும் முக்கியமான ஏர்போர்ட். மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பரபரப்பான இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் இடம்: சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். பல ஆண்டுகள் முன்பாக வெளியான 'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தில் 'சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா?' என இளையராஜா பாட்டுப்பாடி இருப்பார். பாட்டுக்கு வேண்டுமானால் நம்ம ஊர் சொர்க்கமாக இருக்கலாம். ஆனால், நிஜமாகவே சிங்கப்பூர் விமானநிலையம் ஒரு சொர்கபுரிதான். இது ஆசியாவின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்று. ஆசியா, ஓசியானியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்கா என இங்கே இல்லாத விமானச் சேவைகள் இல்லை. 100க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இங்கிருந்து தங்களின் விமானத்தை இயக்கிவருகின்றன.
முதல் இடம்: இதை ஹனேடா விமான நிலையம் என்றும் சில சமயம் டோக்கியோ-ஹனேடா என்றும் சொல்கிறார்கள். கிரேட்டர் டோக்கியோ பகுதியில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. ஜப்பான் ஏர்லைன்ஸ், ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மாடர்ன் ஆகக் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் மட்டும் அழகில்லை. அதன் பின்புலமாக தெரியும் மலையும் அதன் சூழலும் மிக அழகு வாய்ந்தவை.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications