மாயமான மலேசிய விமானத்தை தேட பல தலைமுறைகள் ஆகும்: மலேசியன் ஏர்லைன்ஸ் உயர் அதிகாரி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல தலைமுறை ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

ஒன்றும் இல்லை
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 26 நாடுகள் மாதக்கணக்கில் விமானத்தை தேடி வரும் நிலையிலும் ஒரு பாகம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

விமானம்
ஏதோ விபரீதம் விமானத்திற்கு நடந்துள்ளது. விமானம் திரும்பி வர முயற்சி செய்து முடியாமல் போயுள்ளது என்று நான் நினைக்கிறேன். அது தெற்கு இந்திய பெருங்கடலில் தான் எங்கோ உள்ளது என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன உயர் அதிகாரியான ஹ்யூ டன்லெவி தெரிவித்துள்ளார்.

தலைமுறைகள்
விமானம் கடலில் விழுந்தது என்றால் அதன் பாகங்கள் பெரிய பகுதியில் சிதறிக் கிடக்கலாம். கடலில் மலைகள் உள்ளன. அதனால் விமானத்தை தேட பல தலைமுறைகள் ஆகலாம் என்றார் டன்லெவி.

மலேசிய அரசு
விமானம் திரும்பி வந்ததை மலேசிய அரசு ஏன் உடனடியாக தெரிவிக்கவில்லை. ஒரு விமானம் திரும்பி வருவதை ராணுவம் பார்த்தும் ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு அது எம்.ஹெச்.370 என்று தெரியவில்லை. ஒரு விமானம் திரும்பியதை அதிகாரிகளால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்றார் டன்லெவி.

கடலுக்கு அடியில்
விமானத்தை ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் தேடியும் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானம் தற்போது தேடப்பட்டு வரும் இடத்திலேயே இல்லை என்று சில விமானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications