லண்டனில் சிக்கிய 2ம் உலகப் போரில் வெடிக்காத 50 கிலோ குண்டு – செயலிழக்க வைக்க முயற்சி
லண்டன்: லண்டனில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 50 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது. இதன் அருகே வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மண் அள்ளும் எந்திரம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தது.

திடீரென சுமார் ஐந்து அடி நீளம் கொண்டு பெரிய இரும்பு குண்டு ஒன்று இயந்திரத்தில் தட்டுப்பட்டது. உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அப்போது அந்த குண்டு இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு என கண்டறியப்பட்டது.
50 கிலோ எடைகொண்ட அந்த குண்டை செயலிழக்க வைக்கும் வேலையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 400 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications