"சீக்ரெட்".. தாலிபன்களுக்கு "தண்ணி" காட்டும் இளம்பெண்.. ரகசிய "பள்ளி"யில் சத்தமில்லா சாதனை.. செம்ம
ஆப்கன் குழந்தைகளுக்கு இளம்பெண் ஒருவர் ரகசிய பள்ளியில் பாடம் நடத்துகிறார்
காபூல்: ரத்தக்கண்ணீர் வடித்து வரும், ஆப்கன் மக்களுக்கு, ஒரு ஆறுதல் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.. அதுவும் ஒரு இளம்பெண்ணால்..!
ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்கள், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரவில்லை.
எதிர்பார்த்தபடியே ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது.

சீக்ரெட் ஸ்கூல்
திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்..

ரகசிய பள்ளிகள்
ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆனபோதிலும், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பெண் குழந்தைகளால் பள்ளிக்கு ஒருவருடமாகவே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பெண், குழந்தைகளுக்கு பாடம் நடத்த முன்வந்தார்.. அந்த பெண் பெயர் சோடா நஜந்த்.. காபூலை சேர்ந்தவர்.. பிள்ளைகள் வறுமையால் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதை எண்ணி வேதனைப்பட்ட சோடா, அவர்களுக்கு இலவச பாடம் நடத்த முன்வந்தார்.

பார்க் - பள்ளி
அதுவும் தெருவில் வியாபாரம் செய்து வரும் குழந்தைகளுக்கு பாடங்களை கற்று கொடுக்கவே முதலில் தொடங்கினார்.. இந்த பெண் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆவார்.. தெருவில் வியாபாரம் செய்து வரும் பிள்ளைகளை, காபூல் பூங்காவிற்கு அழைத்து சென்று, அங்கு உட்கார வைத்து பாடம் சொல்லி தந்து வருகிறார்.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் பாடம் நடத்துகிறார். கடந்த ஒரு வருட மாத காலமாகவே இந்த முயற்சியை இந்த பெண் எடுத்து வருகிறார்..

குரான்
இதை பற்றி சோடா சொல்லும்போது, சிறுவர்களுக்கு முதலில் ஆப்கானிஸ்தானில் பேசப்படும் பாரசீக மொழியை கற்று தந்தேன்.. பிறகு எப்படி படிக்க வேண்டும் என்று கற்று தந்தேன்.. பிறகு கணக்கு சொல்லி தந்தேன்.. பிறகு, குரான் படிக்க வைத்தேன்.. இப்போது இந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டுமாம்.. ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்... நான்தான் அவர்களை தடுத்து நிறுத்தி, இப்படி படிக்க அழைத்து வந்தேன்.

சர்ட்டிபிகேட்
இப்படி கல்வியை நான் இவர்களுக்கு கற்பிப்பதன் வாயிலாக, தலிபான்களின் முடிவை எதிர்க்கிறேன்... ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் கடந்த ஒரு வருடமாகவே, இதுபோன்ற ரகசிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த குழந்தைகள் ஆர்வத்துடன் படித்தாலும், பாடங்களை கற்றாலும், அதற்கான அரசு சான்றிதழ் பெற முடியாது... இது ஒன்றுதான் எனக்கு மிகவும் வேதனையை தருகிறது" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications