பார்க்க பாரீஸ் கார்னர் பிச்சைக்காரர் போலவே இருக்கீங்களே, ஏன் தம்பி இப்படி?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தம்பி ராமய்யா மட்டும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தைப் பார்த்தால் அழுதுருவார்.. பார்க்கவே கஷ்டமா இருக்கே தம்பி.. ஏய்யா இப்படி.. என்று வேதனைப்படுவார்.

ஐ படத்தில் விக்ரம், அப்படியே டொக்கு விழுந்து பார்க்கவே பரிதாபமாக தோன்றிய காட்சியைப் பார்த்து பலரும் உச் கொட்டினோம்.. என்னய்யா இது என்று பரிதாபப்பட்டோம்.. ஆனால் இந்த "பார்ட்டி", விக்ரமை விட வில்லங்கமான நடிகராக இருக்கிறார்.

32 வயதான ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஒரு படத்துக்காக தனது உடல் எடையை தாறுமாறாகக் குறைத்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹெம்ஸ்வொர்த்.

சிக்ஸ் பேக் டூ எலும்பும் தோலுமாக

சிக்ஸ் பேக் டூ எலும்பும் தோலுமாக

அட்டகாசமான கட்டழகு நாயகர்களில் ஹெம்ஸும் ஒருவர். சிக்ஸ் பேக் நடிகரும் கூட. ஆனால் தனது புதிய படத்திற்காக அப்படியே உடல் எடையைக் குறைத்து பாரீஸ் கார்னர் பிச்சைக்காரர் போலவே காட்சி தருகிறார்.

உச் உச்

உச் உச்

மெலிந்த தேகமும், முகத்தை மறைக்கும் தாடியுமாக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறி நிற்கிறார் ஹெம்ஸ்வொர்த். இந்தப் படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி தற்போது பலராலும் உச் கொட்டி பார்க்கப்பட்டு வருகிறது.

கடுமையான டயட்

கடுமையான டயட்

இந்தத் தோற்றத்தைப் பெறுவதற்காக கடுமையான டயட்டைக் கடைப்பிடித்துள்ளார் ஹெம்ஸ்வொர்த். தொடர்ந்தும் அந்த டயட்டைக் கடைப்பிடித்து வருகிறாராம். In the Heart of the Sea என்ற படத்திற்காகத்தான் இந்த கெட்டப் மாற்றமாம்.

யாரும் இப்படி செஞ்சுராதீங்க

யாரும் இப்படி செஞ்சுராதீங்க

ஆனால் இப்படிப்பட்ட டயட்டையும், தோற்றத்தையும் யாருக்கும் நான் பரிந்துரைக்க மாட்டேன். என்னோடு இது போகட்டும் என்றும் தனது பிளாக்கில் எழுதியுள்ளார் ஹெம்ஸ்வொர்த்.

தெம்பாத்தான் இருந்தேன்

தெம்பாத்தான் இருந்தேன்

எதற்காக இப்படி ஒரு மெலிந்த தோற்றம் என்று கேட்டால், மிகவும் மெலிந்த, எலும்பும் தோலுமான கதாபாத்திரத்திற்காக இப்படி மாறியுள்ளேன். கடுமையாக கஷ்டப்பட்டு இந்த உடலைக் கொண்டு வந்துள்ளேன். நிச்சயம் கஷ்டமாக இருந்தது. ஆனால் எல்லோரும் எனக்குத் துணையாக இருந்தார்கள். அதுவே தெம்பாக இருந்தது என்கிறார் ஹெம்ஸ்வொர்த்.

மாஸ் படம் பாஸ்

மாஸ் படம் பாஸ்

இந்தப் படம் ஒரு பக்கா திரில்லர் படம். இதில் ஓவன் சேஸ் என்ற மாலுமியாக நடித்துள்ளார் ஹெம்ஸ்வொர்த். கடலில் மிகப் பெரிய சுறா மீன் இவர்களது படகைத் தாக்கி கவிழ்க்கிறது. பலர் உயிரிழக்கிறார்கள். சேஸ் மட்டும் தப்பிக்கிறார். தனியாக தீவு ஒன்றில் சிக்கித் தவிக்கிறார். இந்த மாலுமி கேரக்டருக்காவே இப்படி தோற்ற மாற்றத்தைக் கண்டுள்ளார் ஹெம்ஸ்வொர்த்.

இப்படி ஹெம்ஸ்வொர்த் உள்பட பலரும் கஷ்டப்பட்டு அதேசமயம், இஷ்டப்பட்டு எடுத்த இந்தப் படமானது டிசம்பர் 11ம் தேதி திரைக்கு வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+