அபுதாபி இந்திய தூதரகம் நடத்திய கருத்தரங்கு: என்.ஆர்.ஐ.க்களின் பிரச்சனை குறித்து ஆலோசனை
அபுதாபி: அபுதாபி இந்திய தூதரகம் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கடந்த 13ம் தேதி காலை முதல் மாலை வரை சோஷியல் மற்றும் கல்சுரல் சென்டரில் நடத்திய கருத்தரங்கில் பல்வேறு மாநில அரசு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கு அபுதாபி இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் தலைமை வகித்தார். துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கினை பிரபல தொழில் அதிபரும், லூலூ ஹைபர் மார்க்கெட் அதிபருமான எம்.ஏ. யூசுஃப் அலி தொடங்கி வைத்தார். மேலும் இந்தியர்களுக்கான வழிகாட்டி நூலினை அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரதமர் வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.
கோவா மாநில துணை முதல்வர் பிரான்ஸிஸ் டி சொஸா, வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் புரடக்டர் ஆஃப் இமிக்ரண்ட்ஸ் ஆர். புஹ்ரில், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச் தலைமை செயல் அலுவலர் சுதிர் குமார் ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்திய தூதரக சமூக நல கன்சுலர் ஆனந்த் பரதன், இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன், வெளிநாடு வாழ் இந்திய அமைச்சகத்தின் புரடக்டர் ஆஃப் இமிக்ரண்ட்ஸ் ஆர். புஹ்ரில், அல் ஃபரா குரூப் தலைவர் ஜே.ஆர். கங்காரமணி ஆகியோர் தலைமையில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கோவா, ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் அரசு அலுவலர்கள் பங்கேற்று தங்களது மாநிலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
தமிழகத்தின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான முதன்மைச் செயலாளர் பி. ஆனந்த் பங்கேற்றார். அவர் வெளிநாடு வாழ் இந்திய தமிழர்களது நலனுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விபரங்களை பட்டியலிட்டார்.
இந்திய சமூக நல மையத்தின் கன்வீனர் கே. குமார், அஜ்மான் இந்தியன் அசோசியேஷன் தலைவர் ஓ.ஒய். அஹமது கான், அபுதாபி இந்திய சோஷியல் சென்டர் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் தங்களது அமைப்புகளின் சேவைகளை பட்டியலிட்டனர்.
அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியப் பிரதிகளின் சார்பில் இந்தியன் அசோசியேஷன், ஷார்ஜா, அஜ்மான், துபை ஈமான் கல்சுரல் சென்டரின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கும்பகோணம் சாதிக், துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டர் துபாய் மற்றும் அபுதாபி நிர்வாகிகள், தமிழ் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஒரு நாள் கருத்தரங்கு மூலம் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை தெரிவிக்கப்படும். இவற்றில் அமீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாது தாயகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அபுதாபி இந்திய தூதரகம் மற்றும் துபாய் இந்திய கன்சுலேட் ஆகியவற்றின் முயற்சியால் முதல் முறையாக இக்கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அபுதாபி இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்புற செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications