எச்.ஐ.வி பாதித்தும் பயமில்லை – 43 உலக சாதனைகள் புரிந்த சாதனை மனிதர்
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி பாதித்த ஒருவர் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்து சாதனை புரிந்துள்ளார்.
ஆண்ட்ரேவேன் ஸிஜில் என்பவர்தான் அந்த சாதனையாளர். 54 வயது நபர்.
இதுவரையில் தன்னுடைய மனம் தளராத முயற்சியால் கிட்டதட்ட 43 பேரின் சாதனைகளை முறியடித்து சாதனை புரிந்துள்ளார்.

எச்.ஐ.வி பாதிப்பு:
எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான அவர் தற்போது மற்றொரு சாதனையை மேற்கொண்டுள்ளார்.

மீண்டும் ஒரு முயற்சி:
அதாவது ஓடாத காரில் அமர்ந்து உடற்பயிற்சி சைக்கிள் போன்ற வெறும் சக்கரத்தை மட்டும் மிதித்தபடி 6,700 கிலோ மீட்டர் தூரத்தை அதன்மூலம் கடக்கும் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

காருக்குள் சாதனை:
தென்னாப்ரிக்காவில் உள்ள டிஷ்வானே நகரில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் நிற்கவைக்கப்பட்டுள்ள ஒரு காருக்குள் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஏறி அமர்ந்து வாரம் முழுவதும் பெடல் செய்து 5,731 கிலோ மீட்டர் தூரத்தினை இது வரையில் எட்டியுள்ளார்.

44 உலக சாதனை:
தன்னுடைய லட்சிய தூரத்தினைக் கடப்பதற்கு இவருக்கு இன்னும் 969 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. அதனையும் கடந்து விட்டால் அவர் தன்னுடைய 44 ஆவது புதிய உலக சாதனை தூரத்தினை அடைந்து விடுவார்.

நெல்சன் மண்டேலாவிற்கு அர்ப்பணம்:
அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நோக்கத்துக்காக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், வெறும் பணத்துக்காக மட்டுமன்றி இந்த சாதனையை மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கும் அவர் பிறந்த அதே தேதியில் பிறந்த தனது தாயாருக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அமர்ந்தபடியே 50 புத்தகம்:
மேலும், அக்காருக்குள் அமர்ந்தபடியே இதுவரையில் 50 புத்தகங்களை இவர் படித்து முடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications