சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்! அலறி ஓடிய மக்கள்.. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பதற வைக்கும் காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் உடைந்து சேதம் ஆகியுள்ளன. சீட்டுக்கட்டுகள் போல கட்டிடங்கள் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மனதை பதைபதைக்க வைக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

Buildings Collapse Like a House of Cards Panic Grips Philippines After Powerful Earthquake

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். ஏராளமான தீவுக்கூட்டங்களை கொண்ட பிலிப்பைன்ஸில் உள்ளூர் நேரப்படி காலை 7.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மிண்டோனா பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் மக்கள் கடும் அச்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் உடைந்து சேதம் ஆகியுள்ளன.

சீட்டுக் கட்டுகள் போல சரிந்த கட்டிடங்கள்

சீட்டுக்கட்டுகள் போல கட்டிடங்கள் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மனதை பதைபதைக்க வைக்கின்றன. நிலநடுக்கத்தினால் தற்போது வரை ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 4 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி மேலும் சிலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் கடலோர பகுதி மக்கள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.

உயிர் மிகவும் முக்கியமானது

உயரமான இடங்களுக்கு மக்கள் அவசர அவசரமாக சென்றனர். தற்போது கட்டிட இடிபாடுகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்டவை சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாட் மார்கோஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மாகாணங்களில் வசிக்கும் மக்கள், சுனாமி எச்சரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுங்கள். காத்திருக்க வேண்டாம். நீங்கள் விட்டுச் செல்லும் எந்தப் பொருளையும் விட உயிர் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+