இந்தியா தனது மக்களை தானே கொன்றுவிட்டதாம்! 'கிரிஞ்ச்' தனமாக உளறிய பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா எடுத்துள்ள பதிலடி நடவடிக்கைகள் பாகிஸ்தானை ஆத்திரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாக் ஆட்சியாளர்கள் பலர் கிரிஞ்ச் தனமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி, குற்றச்சாட்டு என்கிற பெயரில் உளறி கொட்டியிருக்கிறார்.
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் இந்தியா, தீவிரவாதத்திற்கு எதிராக துல்லியமான தாக்குதலை தொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "பஹல்காமில் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு எந்த ராணுவ வீரரும் வரவில்லை. இப்படிக்கூடவா எங்காவது நடக்கும்? இஸ்லாம் அமைதியை போதிக்கும் மதம். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. பாகிஸ்தான் எப்போதும் அமைதியைதான் விரும்புகிறது. நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்.
ஆனால் இந்தியா தனது சொந்த மக்களை கொன்று பழியை எங்கள் மீது போடுகிறது. 8 லட்சம் இந்திய ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிற நிலையில், தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆனால் பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
இந்தியாவை இப்படி பாகிஸ்தான் விமர்சித்து பேசுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே அந்நாட்டின் உள்துறை அமைச்சர், ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்தியாவை விமர்சித்திருக்கிறார்கள். ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி, "எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது. அது அனைத்தும் இந்தியாவுக்காத்தான் இருக்கிறது. ஒரு வேளை இந்தியா ஏதாவது செய்ய நினைத்தால் அதற்கான பதிலடி பயங்கரமாக இருக்கும். எங்கள் ஏவுகணைகள் எல்லாம் இந்தியாவை பார்த்துதான் இருக்கிறது.
கஸ்னவி, கோரி, ஷாஹீன் போன்ற ஏவுகணைகள் இருக்கின்றன. அதே நேரம் 130க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இந்தியாவுக்காகவே வைத்திருக்கிறோம்" என பேசியிருந்தார்.
அதேபோல உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, "சிந்த நதிநீரை நிறுத்தியதை பாகிஸ்தான் பொறுத்துக்கொள்ளாது. அது போர் பிரகடனமாக கருதப்படும். இந்தியா எதையாவது செய்ய முயன்றால் பாகிஸ்தான் போருக்கு தயாராகும்" என்று உளறி கொட்டியிருந்தார். முன்னதாக பாக் பிரதமர், "இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. வெளிப்படையான விசாரணைக்கு தயார்" என்று கூறியிருந்தார். அப்படி இருக்கையில், அந்நாட்டின் அமைச்சர்கள் இப்படி கிரிஞ்ச் தனமாக பேசி வருகிறார்கள். இந்த லிஸ்ட்டில் தற்போது ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications