எம்பி பதவிக்காக இப்படியா? பெண்கள் செல்பி எடுத்தபோது ஷகிப் அல் ஹசன் தந்த ரியாக்சன்! குணம் மாறலையே

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்பில் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கிரிக்கெட் களத்தில் மிகவும் கோபக்காரராக அறியப்படும் ஷகிப் அல் ஹசனை தேர்தல் பிரசாரத்தில் பெண்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது அவர் கொடுத்த ரியாக்சன் தற்போது விவாதமாகி உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஷகிப் அல் ஹசன். களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நடத்தை சரியில்லை எனக்கூறி கிரிக்கெட் போட்டியில் இருந்து அவருக்கு தடையும் விழுந்தது.

Shakib Al Hasan yawns and uninterested selfies even he contest Bangladesh Parlimaent Election

இருப்பினும் தற்போது அவர் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் தான் கடந்த ஆண்டு நடந்து முடிந்த 50 ஓவர் உலககோப்பை போட்டியில் வங்கதேச அணி விளையாடியது.

இந்த உலககோப்பை தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்ற வங்கதேசம் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. உலககோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் வங்கதேச அரசியலில் நுழைந்தார்.

கிரிக்கெட்டில் அவர் இன்னும் ஓய்வை அறிவிக்காத நிலையில் அவர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் இணைந்தார். வங்கதேசத்தை பொறுத்தமட்டில் கிரிக்கெட் விளையாடினாலும் கூட வீரர்கள் அரசியலில் இணைந்து செயல்படவும், போட்டியிடவும் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் தடை விதிப்பது இல்லை. இதனை பயன்படுது்தி தான் ஷகிப் அல் ஹசன் அரசியலில் நுழைந்தார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அவரருக்கு ஷகிப் அல் ஹசன் தனது சொந்த தொகுதியான மகுரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இன்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஷகிப் அல் ஹசன் வெற்றி பெறுவாரா? என்பது தெரியவரும். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஷகிப் அல் ஹசன் தனது தொகுதியில் பல இடங்களுக்கு பிரசாரம் செய்ய சென்றார். இந்த வேளையில் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் வந்தது. இந்த வேளையில் இளம்பெண்கள் ஷகிப் அல் ஹசனை சூழ்ந்து கொண்டு தங்களின் செல்போனில் அவரோடு செல்பி எடுத்தனர். இருக்கையில் ஷகிப் அல் ஹசன் அமர்ந்து இருக்க பெண்கள் அவரை சூழ்ந்து மாறிமாறி செல்பி எடுத்தனர்.

அப்போது ஒரு பெண் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் செல்போனை அவரது கன்னத்தில் இடித்தார். ஆனால் ஷகிப் அல் ஹசன் கோபத்தை காட்டவில்லை. இருப்பினும் அவர் அந்த பெண்களின் இந்த செயலை விரும்பவில்லை. இதனால் அவர் சிரிக்காமல் அப்படியே இருந்தார். அதோடு கொட்டாவி விட்டார். மேலும் தனது முகத்தில் சிரிப்பை காட்டாமல் இது எல்லாம் தேவைதானா? என்பது போல் பாவனைகள் செய்தார்.

தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை கூறி வருகின்றனர். இயல்பாகவே ஷகிப் அல் ஹசன் மைதானத்தில் கோபத்தை கொப்பளிக்கும் கடும் கோபக்காரராக அறியப்பட்ட நிலையில் அரசியல் மேடையில் அவர் முற்றிலுமாக மாறிவிட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். எம்பி பதவிக்காக ஷகிப் அல் ஹசன் முற்றிலுமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதோடு இன்னும் சிலரோ கிரிக்கெட்டில் கோபத்தை காட்டிய ஷகிப் அல் ஹசன் அரசியலில் அமைதி காக்கிறார். அவரால் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தனது செய்கை மூலம் அதிருப்தியை காட்டி உள்ளார். அவரது ஆக்ரோஷம் குறைந்தாலும் அவரது செயல் இன்னும் அப்படியே உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+