தீ பிடித்த கப்பல்.. கடலில் குதித்து உயிர் தப்பிய பயணிகள்.. இந்தோனேஷியாவில் அதிர்ச்சி
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் கப்பலில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிடித்த கப்பலில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள பயணிகள் கடலில் குதித்த காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. சிலர் கைக்குழந்தையுடன் கடலில் நீந்தி வருவது பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது.
பல்வேறு தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு இந்தோனேஷியா. இதனால், அந்நாட்டில் கப்பல் போக்குவரத்து மற்றும் சிறிய ரக படகு போக்குவரத்து மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்தோனேஷியாவின் தலுவாட் தீவு பகுதியில் இருந்து வடக்கில் உள்ள சுலவேசி என்ற இடத்திற்கு கப்பல் ஒன்று சென்றது.

கே எம் பார்சிலானோ என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பலில், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ பிடித்துள்ளது. கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென பரவியது. குபுகுபுவென கரும்புகையுடன் கப்பல் முழுவதும் தீ பரவி எரிந்ததால், கப்பலில் இருந்த பயணிகள் அலறினர்.
உடனடியாக கப்பலில் இருந்த உயிர்காக்கும் ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு கடலில் குதித்தனர். பலரும் அருகில் இருந்த மீன்பிடி படகு மூலம் மீட்கப்பட்டனர். கப்பல் கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சியளித்தது. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க பயணிகள் கடலில் குதிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பான வீடியோவை பதிவு செய்த அப்துல் ரஹ்மான் என்பவர் கூறுகையில், "கப்பலில் பின்பகுதியில் இருந்து தீ பிடித்தது. கரும்புகையுடன் தீ மளமளவென பரவியதால் கப்பலில் இருந்த அனைவரும் பீதி அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த மீனவர்கள் தங்கள் படகுகளில் குழந்தைகளை ஏற்றினர்.
கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்பு குழுவினரும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. தற்போதைய நிலவரப்படி ஒருவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் சிலர் கைக்குழந்தைகளோடு கடலில் குதித்த சம்பவம் பதை பதைப்பை ஏற்படுத்தியது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications