அதிர வைக்கும் மரண ஓலம்.. கேரளா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி! பெரும் சோகம்!
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வயநாடு பகுதியில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 தமிழர்களும் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 3 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 150-ஐ கடந்துள்ளது.

சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட இடங்களில் சேற்றுடன் காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றதில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலைக்கு சென்றிருந்தார். இந்த சூழலில் சூரல்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல நிலச்சரிவில் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண குமார் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் ஷிஹாப். பள்ளிவாசல் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் பலியாகியுள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஷிஹாப் உடல் பாறை இடுக்கில் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாண் குமார் ஆகியோர், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில், நீலகிரி பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஷிஹாப் பலியாகியுள்ளார்.
மேலும், முண்டக்கை மேம்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலம்பெயர்ந்து முண்டக்கையில் வசித்து வந்தனர். 11 தமிழர்கள் அங்கு வசித்து வந்த நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலச்சரிவில் அங்கு 30 பேரை காணவில்லை என முண்டக்கை பகுதி மக்கள் கதறி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களின் பாகங்களும் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதி முழுக்க மரண ஓலம் கேட்கிறது.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications