தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியில் பெண் நிருபரிடம் பாலியல் சீண்டல்.. வாலிபர்களுக்கு வலைவீச்சு
பெர்லின்: லைவ் நிகழ்ச்சியொன்றில் பெண் நிருபரிடம் அத்துமீறி நடந்துகொண்ட வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டின் கலோங் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆயிரக்ணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். கலோங் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் திருவிழா தொடர்பான நேரடி தகவல்களை தொலைக்காட்சி பெண் நிருபர் லாபை என்பவர் நேற்று தெரிவித்து கொண்டிருந்தார்.

அப்போது, புத்தாண்டு தினத்தில் போது அகதிகளால் எவ்வாறு பாலியல் வன்முறைகள் அரங்கேறியது என்பது தொடர்பாக அவர் மைக்கை பிடித்து காமிரா முன்பாக நின்று கூறிக்கொண்டிருந்தபோது பின் பக்கமாக வந்த ஒருவர் அவரிடம் அத்துமீறியுள்ளார். இது நேரடியாக ஒளிபரப்பானது.
இதைப்பார்த்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வருவதற்குள் சில்மிஷ நபர் தப்பியோடிவிட்டார்.
பாலியல் தொல்லை அளித்த நபரையும் அவரது நண்பரையும் தற்போது போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெண் நிருபர் கூறியதாவது: அப்பகுதியில் நான் பணி செய்தபோது என்னை பார்த்து பல ஆண்கள், நடு விரலை ஆபாசமாக காட்டினர். நான் மைக்கில் பேசியபோது என் பின்னால் வந்த நபர், இன்று இரவு படுக்கையை ஷேர் செய்ய வருகிறாயா.. என்று காதில் கிசுகிசுத்தார்.
அதை கண்டுகொள்ளாமல், நான் பேசிக்கொண்டிருந்தபோது, எனது பின்புறத்தில் நின்றுகொண்டு உடலுறவு செய்வதை போல உடலை முன்னும் பின்னும் அவரது உடலை இழுத்து ஆபாச சைகை செய்தார். இதன்பிறகு, ஒருபடி மேலே போய், எனது மார்பகங்களை பின்னால் இருந்து பிடித்து அழுத்தினார்.
இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பாதுகாப்பு வீரர்கள் வந்ததும், அந்த நபர் ஓடிப்போனார். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications