பார்ட்டியில் பெரும் பரபரப்பு! நீச்சல் குளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம்.. பதற வைக்கும் வீடியோ
ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் பார்ட்டி ஒன்றின் போது திடீரென நீச்சல் குளத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Recommended Video
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மி யோசெப் நகரில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு பார்ட்டி ஒன்றை நடத்தி உள்ளது.
அந்த பார்ட்டியில் நடந்த சம்பவம் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பார்ட்டி
அங்கு பார்ட்டியில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சில் செய்து கொண்டு இருந்துள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்க அங்குப் பலரும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். அந்தச் சமயத்தில் நீச்சல் குளத்தில் திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. அது நீச்சல் குளத்தில் இருந்த நீரில் இருந்து அனைத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளது. இது அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உயிரிழப்பு
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் நீச்சல் குளத்தில் இருந்து ஒரு ஊழியர் காயமடைந்து உள்ளார். 34 வயதான அந்த நபர் பள்ளத்திற்கு இழுக்கப்பட்டாலும் கூட எப்படியோ சிறு காயங்கள் உடன் தப்பிவிட்டார். இருப்பினும், மற்றொரு நபரால் தப்ப முடியவில்லை. அவர் அந்தப் பள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடியோ
இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் நீச்சல் குளத்தின் தரையில் திடீரென மிகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்படுகிறது. உடனடியாக அங்கு இருக்கும் நீர் உள்ளே இழுக்கப்படுகிறது. குளத்தில் இருந்த சிலர், அதில் சிக்காமல் தப்பிவிட்டனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இருப்பினும், பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே இருந்த இருவர் அதற்குள் உறிஞ்சப்பட்டு உள்ளனர்.

பெரும் சோகம்
பள்ளம் ஏற்பட்ட சமயத்தில் அந்த நீச்சல் குளத்தில் மொத்தம் ஆறு பேர் இருந்ததாகவும். அதில் 4 பேர் எவ்வித காயமும் இல்லாமல் தப்பியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற நினைப்பில் பார்ட்டி நடத்திய நிறுவன ஊழியர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டு உள்ளது.

சிங்க்ஹோல் ஏன்
சிங்க்ஹோல் எனப்படும் பள்ளங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். நிலத்திற்கு அடியே இருக்கும் மண் நீரில் கரைந்துவிடும். அப்போது மெல்லிய அடுக்கு மட்டுமே இருக்கும். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இதுபோன்ற சிங்க்ஹோல்கள் ஏற்படலாம். சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகள் இருக்கும் இடங்களில் சிங்க்ஹோல்கள் அதிகம் ஏற்படும். அதேபோல இயற்கையாக நீர் செல்லும் முறைகளை மனிதர்கள் மாற்றியமைக்கும் போதும் சிங்ஹோல்கள் ஏற்படும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications