பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் பதற்றம்.. அரசுக்கு எதிராக கொதித்தெழும் மக்கள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வன்முறைகள் அதிகரித்திருப்பதால் பதற்றம் உச்சத்தை எட்டியிருக்கிறது. நிலைமையை சரி செய்ய பாக் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் கை கொடுக்காததால், உள்ளூர் மக்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் 8 பேரின் உயிரை வன்முறை போராட்டங்கள் பறித்துள்ளன. ஆனால் இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் அமைதி திரும்பவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி அதிரடி குழுவின் தலைவர் ராஜா ஷோயிப் கூறுகையில், "நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. இவை பாகிஸ்தானின் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள். பாகிஸ்தானின் ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழை மக்களும் காஷ்மீர் மக்களைப் போல ஒரே குரலாக மாறும் ஒரு காலம் வரும். இந்த ஊழல்வாதிகள் இந்தச் சபைகளிலிருந்து அகற்றப்படுவார்கள்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கும், கூட்டு அவாமி அதிரடி குழுவுக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை முசாபராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக கடந்த வாரம் அரசு மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு இடையிலான நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எனவே இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உயர் வர்க்க சலுகைகள் மற்றும் அகதிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த கருத்து வேறுபாடுகளால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அப்போதிருந்து, போட்டி குழுக்கள் அப்பகுதி முழுவதும் போராட்டங்களை நடத்தின. ஆரம்பத்தில் அமைதியான இயக்கமாகத் தொடங்கிய போராட்டம், வன்முறை மோதலாக மாறியதற்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வன்முறையை கட்டுப்படுத்த இரு தரப்புக்கும் இடையே வியாழக்கிழமை புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முசாபராபாத்தில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவைப் பகிர்ந்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் தாரிக் ஃபசல் சவுத்ரி, அரசின் குழு, அவாமி அதிரடி குழுவின் பிரதிநிதிகளுடன் முசாபராபாத்தில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அவர்களின் பொது நலன் சார்ந்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எஞ்சிய சில கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை. இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையில் எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். அமைதியான பேச்சுவார்த்தை மூலம் அதிரடி குழு அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications