அமெரிக்காவில் கணவரை கொன்றதாக இந்திய பெண் மீது வழக்கு
டெக்சாஸ்: அமெரிக்காவில் கணவரைக் கொன்றதாக இந்தியப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரேயா பட்டேல்(27) என்ற பெண், 2012-ம் ஆண்டு தனது கணவர் பிமால் பட்டேலுக்கு மசாஜ் செய்வதாக கூறி பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு கணவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார் என்று கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த பிமால் பட்டேல்(29) சான் அன்டோனியோ ராணுவ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், அவர் 5 மாதங்களுக்குப்பிறகு, 2012 ஏப்ரல் 17ல் இறந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஸ்ரேயாவிடம் கடந்த 4-ந் தேதி விசாரணை தொடங்கியது.
அப்போது, ஸ்ரேயா தன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். மரபணுவியல் நிபுணர்கள் வெள்ளிக்கிழமை சாட்சியத்தை வழங்கினர்.
அவர்கள் கூறுகையில், ஸ்ரேயா பட்டேலின் கைரேகைகள் பெட்ரோல் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கொண்ட 10 காலன் வெள்ளை வாளியில் பதிந்திருந்தாக தெரிவித்தனர்.
சாட்சிகளிடம் விசாரித்தபோது, தெளிப்பான்களை மறைப்பதற்கு அவற்றை பயன்படுத்தியதாக கூறினர். கடந்த மாதம் வரை அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் சோதனை நடத்த சொல்லவில்லை என்றும், டி.என்.ஏ. ஆதாரம் கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது என்றும் தடவியல் நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில், நீதிபதி டேவிட் க்ரெயின் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாராணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரேயாவின் வழக்கறிஞர் வாதத்தை தொடங்கினார். கணவர் தனது உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதுடன், காப்பாற்றும்படி ஸ்ரேயாவிடம் கூறியதாக வக்கீல் தெரிவித்தார்.
ஸ்ரேயா பட்டேல் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பரோலில் வெளிவரமுடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications