மிஸ் நீளமான கால்கள் பட்டம்: 42 இஞ்ச் ஊசி கால்களைக் கொண்ட சைபீரிய பெண் வெற்றி
மாஸ்கோ: உலகின் மிக நீண்ட கால்களைக் கொண்ட பெண்களுக்காக ரஷ்யாவில் நடைபெற்றப் போட்டியில், 42 இஞ்ச் ஊசி போன்ற கால்களை கொண்ட சைபீரிய பெண் மிஸ் நீளமான கால்கள் பட்டத்தை வென்றுள்ளார்.
உலகில் ஆங்காங்கே வித்தியாசமான போட்டிகள் பல நடைபெறுவதுண்டு. அந்தவகையில், ரஷ்யாவில் உலகின் நீளமான கால்களைக் கொண்ட பெண்களுக்கான போட்டி ஒன்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
மொத்தம் 52 பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சைபீரியப் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

மிஸ்.நீண்ட கால்கள்....
சைபீரியாவைச் சேர்ந்தவர் 18 வயதான அனாஸ்தாசியா, நோவஸிபிர்ஸ்க் இன்ஸ்டியூட்டில் சட்டபடிப்பு படித்து வருகிறார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது சிறு வயதுக் கனவாம் இந்தக் கால் அழகிக்கு.

பட்டத்தோடு பரிசுத்தொகை...
உலகின் மிக நீளமான கால்கள் என்ற பட்டத்தோடு அனாஸ்தாசியா, 1,600 பவுண்ட் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

தொண்டு நிறுவனத்திற்கு....
பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு உதவியாக அளிக்கிறேன் என உறுதி அளித்துள்ள அனாஸ்தாசியா, மீதமுள்ள பணத்தில் தனது பெற்றோர்களுக்கு கிப்ட் பொருட்கள் வாங்கி கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

படிப்பில் முழுக்கவனம்...
மேலும், தனது முழு கவணத்தையும் படிப்பிலே செலுத்த உள்ளதாகவும், மாடலிங் துறை வாய்ப்புகளால் எனது கவனம் திசை திரும்பாது என்றும் உறுதி படத் தெரிவித்துள்ளார் அனாஸ்தாசியா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications