ஒன்றுமறியா சின்னப் பையனை விட்டு 4 பேரைக் கொன்று குவித்த ஐஎஸ்ஐஎஸ் கொடூரர்கள்!
டமாஸ்கஸ்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எந்த அளவுக்கு மனித குணமே இல்லாத கோர முகம் கொண்டது என்பதை இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். ஒன்றுமே தெரியாத சிறுவனை வைத்து நான்கு பேரை இரக்கமே இல்லாமல் இவர்கள் கொன்றது தொடர்பான வீடியோ இது.
இந்த சிறுவனின் பெயர் இசா டேர். கடந்த மாதம்தான் இந்த சிறுவன் சர்வதேச அளவில் பாப்புலர் ஆனான். கடவுளை நம்பாதவர்களை கொன்று குவிப்போம் என்று இவன் கோஷம் போடுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் ஏகே 47 துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தும் போஸ் கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான் இந்த சிறுவன். இந்த நிலையில் அதை விட பரபரப்பான செயலை இந்தப் பையனை வைத்து செய்துள்ளனர் ஐஎஸ் கொடூரர்கள்.

இங்கிலாந்து தாய்
இவனது தாயாரின் பெயர் கிரேஸ். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் மதம் மாறி கதீஜா என பெயர் மாற்றம் செய்து கொண்டார். இங்கிலாந்தை விட்டு வெளியேறி விட்டார். இவருக்கு வயது 24.

ஸ்வீடன் கணவர்
இங்கிலாந்தை விட்டு வெளியேறி மத்திய கிழக்குக்கு வந்த இவர் சிரியாவில் தான் சந்தித்த ஸ்வீடனைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதியை 2012ல் திருமணம் செய்து கொண்டார். அபு பக்கர் என்ற பெயர் கொண்ட இவர் ஏற்கனவே தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்.

நான்கு உளவாளிகள் படுகொலை
இந்த நிலையில் இசாவை வைத்து நான்கு "உளவாளிகளை" ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் முகமூடி அணிந்த ஒரு நபர் முதலில் தோன்றுகிறார். அருகில் இச்சிறுவன் நிற்கிறான்.

டேவிட் காமரூனுக்கு எச்சரிக்கை
அந்த நபர் கூறுகையில், டேவிட் காமரூன், சிரியாவுக்கு உனது உளவாளிகளை அனுப்பி வைத்தாய். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு உளவாளிகளை வைத்து எங்களது உயிர்களைப் பறித்தாய்

இன்று உனது உளவாளிகளுக்கு நேர்ந்த கதி
இன்று, நீ அனுப்பிய இந்த நான்கு உளவாளிகளுக்கு ஏற்படும் கதியைப் பார். எப்படி எங்களது சகோதரர்களை நீ கொன்றாயோ அதேபோல நாங்களும் இவர்களைக் கொல்கிறோம் என்கிறார் அந்த நபர்.

காரில் உட்கார வைத்து
பின்னர் ஒரு காரைக் காட்டுகிறார்கள். அதில் இந்த நான்கு பேரையும் உட்கார வைத்துள்ளனர். பின்னர் இந்த சிறுவன் இசாவிடம் வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட்டைக் கொடுத்து அழுத்தச் சொல்கிறார் அந்த முகமூடி நபர்.
ரி்மோட்டை அழுத்தும் சிறுவன்
இதையடுத்து அந்த சிறுவன் ஏதோ வீடியோ கேம்ஸ் விளையாடப் போகும் ஆர்வத்துடன் ரிமோட்டின் பட்டனை அழுத்துகிறான். கார் வெடித்துச் சிதறுகிறது. அது என்ன என்றே புரியாமல் பார்த்துக் குதூகலிக்கிறான் சிறுவன். பின்னர் காருக்கு அருகில் போய் வெற்றி என்பது போல கைகளை மேலே தூக்கி ஜாலியாக சிரிக்கிறான். கடவுள் பெரியவர் என்றும் சத்தமிடுகிறான்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications