மறக்காமல் இந்த செய்தியை உங்களது பேஸ்புக் பக்கத்தில் 'ஷேர்' செய்யுங்கள்.. 4 பேருக்கு உதவும்!
லண்டன்: பேஸ்புக் பக்கம் திரும்பிக் கூட பார்க்காதவர்கள் வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோஷத்தையும், திருப்தியையும் அனுபவிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பேஸ்புக்கிலேயே இருப்பவர்கள், பேஸ்புக் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களை விட 39 சதவீத அளவு குறைந்த சந்தோஷத்தையும், திருப்தியையுமே வாழ்க்கையில் அனுபவிக்கிறார்களாம்.
டென்மார்க்கில் உள்ள ஹேப்பினஸ் ஆய்வுக் கழகம் என்ற அ்மைப்பு 1095 பேரிடம் நடத்திய ஆய்வுக்குப் பின்னர் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

ஒரு வாரம் விரதம்
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப் பேரை தனியாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு பேஸ்புக் பக்கமே திரும்பிப் பார்க்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மீதம் இருந்தவர்களை தொடர்ந்து பேஸ்புக்கைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

திருப்தி எப்படி
ஒரு வாரம் கழிந்த பின்னர் பேஸ்புக்கைத் தொடர்ந்து பார்த்தவர்களையும், தடுத்து வைக்கப்பட்டவர்களையும் அதற்கு முந்தைய வாரத்திலும், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வாரத்திலும் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு திருப்திகரமாக இருந்தது என்பதை 1 முதல் 10 வரையிலான எண்களில் மதிப்பிடச் சொன்னார்கள்.

பேஸ்புக் பக்கம் போகாதவர்கள்
அதில் பேஸ்புக் பக்கம் ஒரு வாரம் போகாதவர்களின் திருப்தி நிலையானது, பேஸ்புக்கில் இருந்தவர்களின் நிலையை விட கணிசமான அளவு அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

பெரிய மாற்றம் இல்லை
பேஸ்புக்கைத் தொடர்ந்து பார்க்க உத்தரவிடப்பட்டவர்களின் திருப்தி நிலையானது சோதனைக்கு முந்தைய வாரத்தில் 7.67 ஆக இருந்தது. சோதனை வாரத்தில் 7.75 ஆக இருந்தது.

செம மாற்றம்
அதேசமயம், பேஸ்புக்கை பார்க்க தடுக்கப்பட்டவர்களின் திருப்தி நிலை சோதனைக்கு முன்பு 7.56 ஆக இருந்தது. சோதனை வாரத்தில் 8.12 ஆக உயர்ந்து காணப்பட்டது.

39 சதவீதம் குறைவு
பேஸ்புக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சந்தோஷம் மற்றும் திருப்தி நிலையானது, பேஸ்புக்கைப் பார்த்தாவர்களின் நிலையை விட 39 சதவீதம் குறைந்து காணப்படுவதும் தெரிய வந்தது.

55 சதவீத அதிக பதட்டம்
மேலும் பேஸ்புக்கைப் பார்க்காதவர்களை விட பார்ப்பவர்கள் 55 சதவீதம் அதிக பதட்டம் நிறைந்தவர்களாகவும் உள்ளதும் தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் அதை விட்டு விட்டால் மிகவும் தனிமையாகவும், கோபமாகவும் உணர்வதாகவும் ஆய்வு கூறுகிறது.

மிஸ் ஆகி விடும்
மொத்தத்தில் பேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடப்பவர்களுக்கு வாழ்க்கையின் பல சந்தோஷ தருணங்கள் மிஸ் ஆகி விடுவதாக இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவி்க்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications