வெளிநாடுகளுக்கும் பரவிய சர்ச்சை: மேகி விற்பனைக்கு சிங்கப்பூர் தடை!
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சர்ச்சையில் சிக்கியுள்ள மேகி நூடுல்சை விற்பனை செய்ய சிங்கப்பூர் உணவு ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் மேகி நூடுல்சை சிறு அளவில் சிங்கப்பூர் கொள்முதல் செய்துவருகிறது. லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் இந்திய நூடுல்ஸ் அதிகம் விற்பனையாவது வழக்கம்.

இந்நிலையில், மேகியில் அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள் இருப்பது தெரியவந்து அது இந்தியாவின் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட நிலையில், சிங்கப்பூர் விவசாய உணவு மற்றும் கால்நடை ஆணையம், இந்தியாவில் தயாராகும் மேகி நூடுல்சை விற்பனை செய்ய வேண்டாம் என்று இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே லிட்டில் இந்தியா பகுதியில் மேகி விற்பனை தொடருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அங்குள்ள வணிகர்களுக்கு முறைப்படி இத்தகவலை கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications