நிறைவேறாமல் போன ‘லீ’யின் கடைசி ஆசை…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 50வது ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே என்று அந்நாட்டு மக்கள் கண்ணீருடன் கூறிவருகின்றனர். தேசத்தந்தையின் மறைவுக்கு அவர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய லீ குவான் யூ. ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 50வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது பொன்விழா ஆண்டாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என லீ, தனது நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே முதுமை காரணமாக லீ குவான் யூ, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நியுமோனியாவினால் பாதிக்கப்பட்ட அவர் சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல் வெளியாகவே, நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
சிங்கப்பூர் நாட்டில் பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக லீ மரணமடைந்துள்ளதால், சிங்கப்பூர்வாசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
லீ யின் கடைசி ஆசையை அவர் உயிரோடு இருக்கும் போதே நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்று அவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லீ குவான் யூவின் மறைவை ஒட்டி இரங்கல் அட்டைகளையும், மலர் கொத்துக்களையும் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லீ குவான் யூவின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். லீ யின் மரணத்தை அடுத்து ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதால் சிங்கப்பூரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications