‘கேர்ஸ்பிரண்ட்’ கிடைக்கலையே... ஆதங்கத்தில் ‘அதை’ நறுக்கிக் கொண்ட சீன இளைஞர்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: காதலி கிடைக்காத ஆத்திரத்தில் சீன இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

காதலித்துத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்ட சீன இளைஞர் ஒருவர் நெடுநாட்களாக தனக்கு காதலி கிடைக்காத ஆத்திரத்தில் தனது ஆணுறுப்பை வெட்டி எறிந்துள்ளார்.

காதலி தேவை...

காதலி தேவை...

சீனாவில் உள்ள ஜியாசிங் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் யாங் ஹூ என்ற 25 வயது இளைஞர். இவர் கடந்த பல ஆண்டுகளாக தனக்கு ஒரு பெண் துணை தேடியுள்ளார். வேலை தேடி நகரம் செல்வது போல, இவர் காதலி தேடி நகரம் சென்றுள்ளார். ஆனால் அங்கும் இவருக்குக் காதலி கிடைக்கவில்லையாம்.

ஆதங்கம்....

ஆதங்கம்....

இதனால் விரக்தியின் உச்சத்திற்குப் போன யாங், கடந்த 27ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். தனக்கு ஒரு காதலி இல்லையே என்ற ஆதங்கத்தில் திடீரென தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டுள்ளார் யாங்.

மறந்துட்டயே....

மறந்துட்டயே....

இதில் வினோதம் என்னவெனில் இந்த பயங்கரத்தை தனக்குச் செய்துகொண்டபிறகு ரத்தம் ஊற்ற ஊற்ற தன் சைக்கிளில் ஆஸ்பத்திருக்கு சென்றுள்ளார் யாங். அங்கு சென்ற பிறகு தான் மருத்துவர்கள் ‘அறுபட்ட ஆணுறுப்பைக் கொண்டு வரவில்லையா?' என நினைவூட்டியுள்ளார்கள்.

ஆபரேஷன்....

ஆபரேஷன்....

பின்னர், மருத்துவர்களின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் சைக்கிளில் சென்று வெட்டிக் கீழே எறிந்த ஆணுறுப்பை எடுத்து கொண்டு மறுபடியும் ஓடி வந்தாராம் யாங். யாங்க்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆபரேஷன் வெற்றியா தோல்வியா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

பெண்களை மறக்க....

பெண்களை மறக்க....

யாங் இவ்வாறு செய்ததன் பிண்ணனியில், ‘குறைந்தது பெண்களை பற்றி நினைக்காமலாவது இருக்கலாமே' என்ற எண்ணம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+