விமானத்தில் கோளாறு... அவசரமாக சாலையில் தரை இறக்கி உயிர் தப்பிய தொழிலதிபர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்ஜின் கோளாறால் பழுதான விமானத்தை அவசரமாக சாலையில் இறக்கி உயிர் தப்பி உள்ளார் தொழிலதிபர் ஒருவர்.
அமெரிக்காவின் மேற்கு ஃபோர்ட்ஹார்டிலுள்ள கனெக்டிகட் நகரத்திற்கு அருகிலுள்ள டேரிங்க்டனில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் டேனி ஹால் (48). இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன்னுடைய ஸ்கைலைன் செஸ்னா என்ற சிறிய ரக விமானம் ஒன்றில், மற்றொரு ஊழியருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கனெக்டிகட் பகுதிக்கு அருகில் வந்த போது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தை அருகில் இருந்த சாலையில் தரை இறக்கினார் டேனி. முதுகில் லேசான காயங்களுடன் இருவரும் உயிர் தப்பினார்.

இது குறித்து டேனி கூறுகையில், ‘ஒருவேளை என்னால் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியாது போனால், என் குழந்தைகளிடம் நான் அவர்களை நேசிப்பதைச் சொல்லி விடுங்கள்" என்று விமான கட்டுப்பாட்டு துறை அதிகாரியிடம் நான் தெரிவித்தேன். எனினும் அவர், "நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என் நம்பிக்கையுடன் பேசினார்.
விமானத்தை நான் தரையிறக்கிய போது நூலிழையில் அங்கிருந்த வீடுகளும், அலுவலகங்களும் தப்பியது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கைகள் முறிந்து போனது. நாங்கள் விமானத்திலிருந்து வெளியேறியதும் இஞ்ஜினிலிருந்து புகை வந்தது. விபத்து நடந்த பகுதியை விட்டு தூரமாக வந்த பின்னரே பாதுகாப்பாக உணர்ந்தேன். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாதது மனதுக்கு ஆறுதலாக உள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு தான் ஓட்டி வந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட போது, அந்த விமானத்தை டேனி ஆற்றில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications