ஆத்தா ஆடு வளர்த்துச்சு.. நாய் கூட வளர்த்துச்சு.. ஆத்தாடி.. இதையெல்லாமா வளர்ப்பாங்க.. !

Subscribe to Oneindia Tamil

சார்லட், அமெரிக்கா: நாய் வளர்ப்பாங்க, பூனை குட்டி வளர்ப்பாங்க, அட முயல் குட்டி கூட வளர்ப்பாங்க பாஸ்.. ஆனா பாம்பு வளர்க்கணும்னு நினைக்கிறவங்களை பார்த்தா எப்படி இருக்கும்.

அதுவும் என்னோட ஆறு வயது குழந்தைக்கு ஒரு குட்டி வளர்ப்பு பிராணி மாதிரி இருக்க சின்னதா ஒரு பாம்பு கொடுங்க என்று கடையில் கேட்டு கொண்டிருந்த பெண்ணை பார்த்திருக்கீங்களா. அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு எடுத்த வீடியோ இங்கே உங்களுக்கு.

வளர்ப்பு மீன் வாங்க கடைக்கு போன எங்களுக்கு ஒரு புது அனுபவம் காத்திருந்தது தெரியாமல் அந்த வளர்ப்பு பிராணிகள் வாங்கும் பெரிய கடைக்குள் நுழைந்தோம். நாய் குட்டி, பூனை குட்டி , லவ் போர்ட்ஸ் அப்புறம் நாங்க வாங்க நினைத்த வளர்ப்பு மீன் அன்று எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க இரண்டு கோல்ட் பிஷ் வாங்கி பையில் போட்டு பில் போட கிளம்பின போது தான் அதை பார்த்தோம்.

ஆ பாம்பு

ஆ பாம்பு

நான் ரொம்ப பயப்படுவேன் அதை பார்க்க. பெரும்பாலானவர்களுக்கும் அப்படித் தான் இருக்கும். அட சூப்பர் ஸ்டாரையே நடுங்க வைக்கும் மேட்டராச்சே அது.. அது தாங்க பாம்பு . நாங்க கடையில் பார்த்தது பெரிய பாம்பு இல்லை. சின்ன ஒரு பாம்பு. ஆனா ஒரு பெண் அதை கையில் வாங்கி லாவகமாக இரண்டு கைகளுக்கு இடையில் வைத்து அதைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆச்சரியம் தாங்காமல் கிட்டப் போய் பார்த்தோம். அருகில் போய் மட்டுமில்லை ஆசையாய் இல்லை ஆசையாய் என்று சொன்னால் சரியாக இருக்காது.. ஆச்சரியமாக தடவி கூட கொடுத்தோம்.

நாய்க் குட்டி மாதிரிதான்

நாய்க் குட்டி மாதிரிதான்

எப்படி பயமில்லாமல் பாம்பை கையில் வாங்குகிறார்கள் என்ற ஆச்சர்யத்தில் அதை வாங்க வந்த பெண்ணிடம் கேட்டபோது அவங்க சொன்னது இது தான்: "பழக்கமில்லாதவங்களை பார்த்தா நாய் குரைக்கிற மாதிரி தான் இந்த பாம்பும். நாம பக்குவமாய் அதை கையில் வச்சால் அது எதுவும் செய்யாது. அப்புறம் நாம் பயப்பட்டா அதை பாம்பால் உணர முடியும். அதனால் நாம சர்வ சாதாரணமாக அதை அணுகினால் அதுவும் நல்ல பிள்ளையாக இருக்கும்" என்று கொஞ்சம் கூட பயப்படாமல் கூலாக சொன்னார்.

ஆத்தாடி

ஆத்தாடி

"நாய், பூனை, எலி ,பறவைகள் என்று பல வளர்க்கிறோம் . என் குழந்தைக்கு ஒரு சின்ன பாம்பு வாங்கி கொடுக்கணும். ஒரு மூணு நாள் வந்து பார்த்து தடவி அது கூட பழகி பின் வீட்டுக்கு வாங்கிப் போவோம்" என்று சொன்னார் அவர். பார்க்க சீனகாரங்க மாதிரி தெரியவில்லை அமெரிக்கர் தான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது. நீங்களும் உங்க பிள்ளைங்களுக்கு வாங்கி கொடுக்கலாம் என்று சொன்னபோது.. ஆத்தாடி ஆளை விடும்மா ஓடுறோம்.. என்று நாங்க கிரேட் எஸ்கேப்!

பொறுமையான விளக்கம்

பாம்பை எப்படி பார்த்துக்கொள்வது. அது என்ன சாப்பிடும்? அது மட்டுமா.. ஆண் பாம்பு எது பெண் பாம்பு எது ? எப்படி கண்டுபிடிப்பது என்ற வாடிக்கையாளரின் கேள்விக்கு சூப்பரான பதில் தருகிறார் நம்ம விற்பனையாளர். நீங்களே விடீயோவைப் பாருங்க.

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+