ஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி?.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்!
பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று அங்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் குடியரசு கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை மத்திய வலதுசாரி கொள்கை கொண்ட கட்சியான சிடியூ சிஎஸ்யு கட்சியின் அரசியல் தலைவர் ஏஞ்சலோ மெர்கல் போட்டியிடவில்லை. நாட்டின் தலைவராக அதாவது சான்ஸ்லராக கடந்த 16 வருடமாக ஏஞ்சலோ மெர்கல் இருந்தார். தொடர்ந்து 16 வருடமாக ஆட்சியில் இருந்தவர் கடந்த 4 வருடம் கடுமையான அரசியல் எதிர்ப்புகளை சந்தித்தார்.
அங்கு கடந்த 2017 பாராளுமன்ற தேர்தலுக்கு பின் சோஷியல் குடியரசு கட்சிக்கும் மெர்கலின் சிடியூ சிஎஸ்யு (கிறிஸ்டியன் குடியரசு கட்சி) கட்சிக்கும் இடையில் கூட்டணி முறிந்தது. அதன்பின் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து அங்கு கடந்த 4 வருடம் ஆட்சி அமைத்தது. கடந்த ஆட்சியில் ஒரே கூட்டணியில் இருந்த இரண்டு கட்சிகளும் இந்த முறை பிரதான எதிர்கட்சிகளாக தேர்தலில் மோதி உள்ளனர்.

போட்டியிடவில்லை
இந்த தேர்தலில் நாட்டின் தலைவர் பதவிக்கு சான்ஸ்லர் ஏஞ்சலோ மெர்கல் போட்டியிடவில்லை. இவரின் இந்த முடிவு காரணமாக மக்கள் இடையே சிடியு கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது. அதேபோல் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, அரசியல் நிலையற்றதன்மை, சீனாவுடன் மோதல் என சர்வதேச நிலைப்பாடுகளில் ஜெர்மனியின் சறுக்கல் என்று பல்வேறு காரணங்களால் ஆளும் ஏஞ்சலோ மெர்கலின் சிடியு கட்சிக்கு பெரிய ஆதரவு இல்லை. இதனால் அவர் இந்த தேர்தலை தவிர்த்துவிட்டார்.

யார் போட்டி?
இதனால் சிடியு கட்சி சார்பாக ஆர்மின் லாஸ்செட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் நிதி அமைச்சர் ஒல்ஃப் ஸ்கால்ஸ் போட்டியிட்டார். இவர்கள் இருவரும்தான் பிரதான போட்டியாளர்கள். அங்கு பாராளுமன்றத்திற்கு இரண்டு வாக்குகள் செலுத்தும் வகையில் தேர்தல் நடக்கும். மக்கள் இரண்டு வாக்குகளை செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் 299 இடங்களுக்கு வாக்குகள் செலுத்தப்படும்.

மாநில உறுப்பினர்கள்
அதேபோல் மாநிலங்கள் வாரியாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மொத்தம் 598 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சில மாநிலங்களில் மட்டும் இரண்டாம் வாக்கு பதிவு செய்யப்படும். அந்த இரண்டாம் வாக்கு அடிப்படையில் கூடுதலாக 111 இடங்கள் வரை தேர்வு செய்யப்படும். அதாவது இங்கே தேர்தல் நடக்கும் இடங்கள் ஒவ்வொரு முறையும் மாறும். அதிகபட்சம் 730 இடங்கள் வரை தேர்தல் நடக்கும். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் இந்த முறை தேர்தல் நடைபெற்ற 730 இடங்களில் அதிக இடங்களை வெல்லும் கட்சியே அங்கு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னிலை
ஜெர்மனியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் குடியரசு கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. சோசியல் குடியரசு கட்சியின் ஒல்ஃப் ஸ்கால்ஸ் 205 இடங்களை பெற்றுள்ளார். 25.8% வாக்குகளை இவர் பெற்றுள்ளார். சிடியு கட்சி சார்பாக ஆர்மின் லாஸ்செட் அதாவது ஆளும் மெர்கல் கட்சிக்கு 194 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. 24.1% வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. கடந்த 16 வருடத்தில் ஆளும் கட்சி பெற்ற மோசமான வாக்குகள் ஆகும் இது.

போர்
அதேபோல் இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியில் ஏற்பட்ட மிக மோசமான் அரசியல் குழப்பமாக இது பார்க்கப்படுகிறது. அங்கு சோஷியல் கட்சி முன்னிலை பெற்றாலும் தனி மெஜாரிட்டி பெறவில்லை. எந்த கட்சியும் பெரிதாக மெஜாரிட்டி பெறாமல் மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்ற கிரீன் பார்ட்டி, எப்டிபி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அங்கு சோஷியல் கட்சி ஆட்சி அமைக்க முடியும். இதனால் அங்கு முழுமையான ஆட்சி முடிவுகள் தெரிய, புதிய தலைவர் பதவி ஏற்க சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications