இறைவா என்ன கொடுமை இது.. தாயின் உயிரற்ற உடல்.. சுவர் ஏறி குதித்து.. ஏக்கத்துடன் பார்த்த மகன்!
தாயின் சடலத்தை ஜன்னல் வழியாக கண்ட மகனின் போட்டோ வைரலாகி வருகிறது
ரம்லா, பாலஸ்தீனம்: உயரமாக இருக்கும் ஜன்னல் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு தன் தாயின் சடலத்தை சோகத்துடன் பார்க்கும் இளைஞனின் வீடியோ ஒன்று மனதை பிசைந்தெடுத்து வருகிறது.
இந்த கொரோனா பல பாடங்களை உலகுக்கு கற்று தந்து வருகிறது.. மனிதாபிமானம் எந்த அளவுக்கு மலிந்துவிட்டது என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

ஒருவர் தொற்று பாதித்து இறந்துவிட்டால், கட்டின மனைவியும், குழந்தைகளும் அவரை தொட்டுக்கூட அழ முடியாத துர்பாக்கிய நிலையையும் பார்க்க முடிகிறது... இதற்கு நடுவில் ஆங்காங்கே "மனிதம்" மலர்ந்தும் வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வருவதையும் கண்டு வருகிறோம்.
அந்த வகையில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.. பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் அம்மா பெயர் ரஸ்மி.. இவருக்கு சமீபத்தில் தொற்று பாதிப்பு இருந்தது.. அதனால், ஹெப்ரான் மாநில ஆஸ்பத்திரியில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவருக்கு 73 வயதாகிறது.
ஆஸ்பத்திரியில் தாயை அனுமதித்தவுடன் இவரது மகனுக்கு விஷயத்தை சொல்லி உள்ளனர்.. மகனுக்கு 30 வயதாகிறது. அதனால், அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார் மகன்.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அம்மா இறந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் கடைசிவரை அம்மாவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை.. இறந்தபிறகும் அருகில் சென்று பார்க்கலாம் என்றால் தொற்று பாதிப்பு காரணமாக டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால், ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இளைஞர் ஏறி, மாடியில் உள்ள ஒரு ஜன்னலில் ஏறி உட்கார்ந்து கொண்டு, இறந்துபோன அம்மாவின் ஐமகத்தை சோகத்தோடு பார்க்கிறார்.. இதை ஆஸ்பத்திரியில் இருந்தவர்களே பார்த்து கண்கலங்கி விட்டனர்.. அதை போட்டோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட, அது அனைவரையும் கலங்கடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications