கொரோனா தடுப்பூசி ஒரு சாத்தான்.... உளறி கொட்டிய தலைமை நீதிபதி!

Subscribe to Oneindia Tamil

ஜோகனஸ்பர்க்: கொரோனா தடுப்பூசி சாத்தான் போன்றது எனவும் மக்கள் அதனை பயன்படுத்தக்கூடாது எனவும் தென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் சர்ச்சை கருத்து தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என பல நாடுகளில் மக்கள் ஏங்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாட்டின் தலைமை நீதிபதியே தடுப்பூசிக்கு எதிராக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 South Africas Supreme Court Chief Justice Mogoyang Mogoyang has commented

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா மொத்த பாதிப்பு 8.45 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 852 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகிறது. அந்நாட்டு மக்களும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே நிறைந்த தீர்வு என நம்பிக்கையுடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தடுப்பூசிக்கு எதிராக கருத்து கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஒரு தேவாலயத்தில் தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் கூறியதாவது:-
மக்களுக்கு தடுப்பூசி ஏன் வேண்டும்? தடுப்பூசி எப்போதும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தடுப்பூசி போடும்படி மக்களை நீங்கள் கட்டாயபடுத்த முடியாது. தடுப்பூசிகளை நான் கடவுளாக பார்க்கவில்லை. அது ஒரு சாத்தான் போன்றது. தடுப்பூசி போட்டால் மக்களின் மரபணுக்கள் அழிந்து விடும். எனவே இந்த தடுப்பூசிகளை கடவுள் அழிக்க வேண்டும் என்று மோகோயங் மோகோயங் கூறினார்.

இவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மக்கள் தடுப்பூசியை புனிதமாக கருதும் நிலையில் நீதிபதி பைத்தியம் போல் உளறி கொட்டி உள்ளார் என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவர் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்களை கூறுவது தவறு என தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். ஆனாலும் தான் கூறிய கருத்தில் திடமாக உள்ள மோகோயங் மோகோயங் மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+