மண்டேலா மண்ணாச்சே.. இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஆக்ஷன்! காசாவில் இனப்படுகொலை என வழக்கு
கேப் டவுன்: காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென் ஆப்பிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படையினருக்கும் - இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகள், நட்பு நாடுகள், ஐநாவின் அறிவுரைகளை ஏற்க மறுத்து இடைவிடாத தாக்குதலை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்கா ஒரு படி மேலேபோய் இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா வழக்கு: இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு தெரிவிக்கையில், "காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவையாகும். காரணாம், பாலஸ்தீன தேசத்தவர்கள் மற்றும் பாலஸ்தீனிய இனக்குழுவின் பெரும் பகுதியினரை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாலஸ்தீனியர்களைக் காஸாவில் கொலை செய்வது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அவர்களை உடல் ரீதியான பாதிக்கப்பட செய்து திட்டமிட்டு அவர்களின் வாழ்க்கை சூழலை மோசமாக்குவது சந்தேகமளிக்கிறது." என்று தென் ஆப்பிரிக்கா அழுத்தமாக தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது.
ஏற்கனவே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் நிற வெறி தாக்குதல்களுக்கு ஈடானவை என பல நாடுகள் விமர்சித்து இருந்தன. இஸ்ரேலும், தென் ஆப்பிரிக்காவின் ஐநாவின் உறுப்பினர்களாக உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அரசு தொடர்ந்து இருக்கும் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன் போர்: பாலஸ்தீனுக்கு சொந்தமான பெரும் பகுதி நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்து அந்நாட்டு மக்கள், வழிபாட்டு தளங்கள் மீது பல ஆண்டுகளாக தாக்குதல்கள் நடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லைக்குள் அந்நாட்டு மக்கள், வெளிநாட்டவர்கள் என 240 பேரை கைது செய்து பிணைக் கைதி காசாவிற்குள் இழுத்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளார்கள். இவர்கள் குழந்தைகள், பெண்கள் அதிகம்.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மட்டும் இதுவரை 8,800 குழந்தைகள், 6,300 பெண்கள் உட்பட 21,672 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள். 8,663 குழந்தைகள், 6,327 பெண்கள் உட்பட 56,165 பேர் படுகாயமடைந்து உள்ளார்கள். இஸ்ரேல் தரப்பில் 1,405 ஆக உயரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. காசா மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும், மீட்பு மற்றும் நிவாரண முகாம்களை தாக்கியது, போரில் ஈடுபடாமல் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்த அகதிகளின் தங்கியுள்ள முகாம்களை அழித்தது, மருத்துவமனை, பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளை கொன்றது, குழந்தைகளை கொன்றது போன்றவை போர் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications