சென்னை, பெங்களூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதி மலேசியாவில் கைது
கோலாலம்பூர்: சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தூதரகங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதியை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள கெபாங் பகுதியில் தங்கியிருந்த ஒருவர் மீது அந்நாட்டு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அந்த நபரை கடந்த டிசம்பர் மாதம் முதல் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கண்காணிப்பில் அவர் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மலேசிய தீவிரவாத தடுப்பு படையினர் அந்த நபரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தத்துக் செரி முகமது பக்ரி முகமது ஜினின் கூறுகையில்,
அந்த தீவிரவாதியை கண்காணித்தபோது கிடைத்த தகவல்களை நாங்கள் கடந்த மாதம் 9ம் தேதி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். நாங்கள் அளித்த தகவல்களை வைத்து சென்னையில் கடந்த மாதம் 29ம் தேதி 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேயில தூதரகத்தை தகர்க்க திட்டமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications