Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்கொரியாவில் அவசர நிலை வாபஸ்.. அறிவித்த சில மணி நேரங்களில் முடிவை மாற்றிய அதிபர்

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென்கொரியாவில் இரவோடு இரவோக தொலைக்காட்சியில் தோன்றிய அந்நாட்டு அதிபர் யூன் சாக் யோல் அவசர நிலை அறிவித்தார். இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சில மணி நேரங்களில் அவசர நிலை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

கொரியாவில் அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அங்குள்ள யூன் தலைமையிலான அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இதற்கிடையே கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் அதிரடியாக அறிவித்தார். தென்கொரிய அதிபரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், திடீரென மனம் மாறிய தென்கொரிய அதிபர், அவசர நிலை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

south korea emergency world

முன்னதாக அவசர நிலை அறிவித்தது ஏன் என்பது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது அதிபர் யூன் சுக் யோல் கூறியதாவது: , "வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் நான் அவசரக்கால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன் இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள்.

இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இதற்கிடையே கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நமது தேசிய சட்டமன்றம் இப்போது குற்றவாளிகளின் புகலிடமாகவும், சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது. அங்குள்ள சிலர் நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி நமது நாட்டின் ஜனநாயகத்தைக் கவிழ்க்க முயல்கிறார்கள். போதைப்பொருள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது, பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நிதியைக் குறைக்கச் சொல்கிறார்கள். நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், மக்களின் பாதுகாப்பில் குளறுபடிகளைச் செய்யவே எதிர்க்கட்சிகள் இதுபோல செய்கிறார்கள்" என்றார்.

கொரியாவிலும் அமெரிக்காவைப் போலவே அதிபர் ஆட்சி முறை தான். இதன் காரணமாகவே கொரிய அதிபராக யூன் சுக் இருந்தாலும் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றத்தில் அவரது மக்கள் சக்தி கட்சிக்கு 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதேநேரம் பிராதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு சுமார் எம்பிக்கள் உள்ளன. இதன் காரணமாகவே அடுத்தாண்டின் பட்ஜெட்டை அவர்களால் முடக்க முடிகிறது.

எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்த அதிபர் யூன். ஒரு கட்டத்தில் அவர்களை ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படும் தேச விரோத சக்திகள் என்றும் குறிப்பிட்டார். மேலும், தென் கொரியாவின் ஜனநாயகத்தைக் காக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தன்னிடம் வேறு வழி இல்லை இல்லை என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வேறு வழியில்லாமல் தான் நான் எமர்ஜென்சியை கொண்டு வருகிறேன். இதைத் தவிர்க்க முடியவில்லை. அதேநேரம் தேச விரோத சக்திகளை விரைவில் ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவேன்" என்று அவர் குறிப்பிட்டார். இப்படி ஆவேசமாக பேசிய தென்கொரிய அதிபர் சில மணி நேரங்களில் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+