வடகொரியாவின் முக்கிய மூவ்! தென்கொரியாவை அலறவிடும் கிம்ஜாங் உன்! பின்னணில் ஷாக் காரணம்
பியாங்யாங்: வடகொரியாவில் அணு ஆயுத தடவாளத்தில் புதிய உலை கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், இது வரும் கோடை காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதிலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என தென் கொரியா அச்சம் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க நாடாக இருந்தாலும், அதனை வடகொரிய அசலாட்டாக எதிர்த்து வருகிறது. இதற்கு காரணம் வடகொரியாவிடம் இருக்கும் ஆயுதங்கள்தான். வடகொரியாவின் அதிபர் கிம்ஜாங் உன் அமெரிக்காவிடம் இல்லாத ஆயுதங்களை கூட தயாரித்து பரிசோதித்து வருகிறார்.

இந்த ஆயுதங்கள் நேரடியாக அமெரிக்காவை தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அமெரிக்கா, ஜப்பானையும், தென் கொரியாவையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு வடகொரியாவை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.
இருப்பினும், தற்போது வடகொரியா சில அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது, அணு ஆயுத தடவாளத்தில் புதிய உலையை தயார் செய்து வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றாலும், கூடவே அணு ஆயுதங்களுக்கு தேவையான புளூட்டோனியத்தையும் தயாரிக்க முடியும். இதுதான் அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. எனவே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து தென்கொரிய அதிகாரிகள் கூறுகையில், "வட கொரியா நீண்ட காலமாக யோங்பியோனில் உள்ள 5 மெகாவாட் அணுஉலையில் இருந்து ஆயுத தர புளூட்டோனியத்தை தயாரித்து வருகிறது. மின்சார உற்பத்திக்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருவதாக வடகொரியா கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய இலகு-நீர் உலையை அது நிறுவியுள்ளது. இந்த ஆலை வரும் ஏப்ரல்-மே மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் இலகு-நீர் உலைகளை கொண்டு அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
ஆனால், இதிலிருந்து பெறப்படும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்துடன் புளூட்டோனியம் அணு ஆயுதங்களுக்கு சிறந்த எரிபொருள் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. ஏற்கெனவே பல்வேறு புதிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இப்படி இருக்கையில் அணு ஆயுதங்களை வடகொரியா தயாரிக்காது? என்பதை எப்படி நம்ப முடியும்?" என தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்சிக் கூறியுள்ளார். ஒருவேளை வடகொரியா அணு ஆயுதங்களை தயாரித்தால் அது ஆசியாவில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்க தயங்காது. அதேபோல, சீனாவும் சும்மா இருக்காது. இப்போதைய சூழலில் சீனாவும், ரஷ்யாவும் கைகோர்த்தால் பாதி உலக நாடுகள் இவை பின்னால் அணி திரளும். அதேபோல அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications