தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள்! தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல்
சியோல்: தென் கொரியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் கூறியுள்ளார். இனி தென் கொரியாவில் மீண்டும் ராணுவ ஆட்சியை அமல்படுத்த மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி இரவோடு இரவாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமாக எதிர்க்கட்சிகள் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் தேச விரோத சக்திகளின் அச்சுறுத்தலால் ராணுவ ஆட்சியை கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

2025 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதனால் நாடாளுமன்றமே முடங்கியது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சியை அதிபர் யூன் கொண்டு வந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தென்கொரியா நாடாளுமன்றத்தில் நடந்த நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
ராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.அதாவது 300 எம்பிக்களில் 190 பேர் எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ராணுவச் சட்டம் செல்லாது என்றும் அறிவித்திருந்தார்.
பிறகு ராணுவ ஆட்சியை திரும்ப பெறுவதாக அதிபர் அறிவித்தார். இதனால் அங்கு 12 மணி நேரம் நீடித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் மக்களை கவலையடையச் செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன்.
எனது அரசியல் எதிர்காலத்தை மக்கள் சக்தி கட்சி தீர்மானிக்கும். எனது தவறுக்காக நான் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் அடைந்த விரக்தியின் காரணமாக ராணுவ ஆட்சியை கொண்டு வந்துவிட்டேன் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications