கிம் ஜாங் உன்னிற்கு ஒன்றும் இல்லை.. நன்றாக இருக்கிறார்.. யூகங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த தென்கொரியா
சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
Recommended Video
கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் 108 ஆவது பிறந்த நாள்விழாவில் அவர் கலந்து கள்ளவில்லை. இதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின.
இந்த பிறந்த நாள் விழா அந்நாட்டு நாள்காட்டியில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியிலேயே கிம் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.

சீனா
இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அண்டை நாடான தென்கொரியாவோ அந்த நாட்டில் நடப்பதை பார்த்தால் கிம்மிற்கு உடல்நிலை மோசமாக இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவவில்லை என தெரிவித்தது. இதையே சீனாவும் தெரிவித்தது.

ஊடகங்கள்
எனினும் வடகொரிய ஊடகங்களோ எந்த வித தகவலையும் சொல்லாமல் இருந்தன. இதுகுறித்து பல்வேறு ஊகங்கள் துளிர்விட்டு வந்த நிலையில் கிம்மிற்கு சொந்தமான ரயில் வான்சான் நகரில் ஏப்ரல் 21 ஆம் தேதி இருப்பது போன்ற ஒரு செயற்கைகோள் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் கிம் அந்த நகரத்தில் இருக்கலாம் என தெரிகிறது.

நன்றாக இருக்கிறார்
இந்த நிலையில் கிம்மின் உடல் நிலை குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜோ இன்னின் வெளிநாட்டுக் கொள்கைக்கான ஆலோசகர் சங்க் இன் மூன் கூறுகையில், கிம்மின் உடல்நிலை குறித்து எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார். அவர் நன்றாக இருக்கிறார். அந் நாட்டில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

எந்தவித தகவல்
கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அது குறித்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்காவின் உளவுத் துறை கூறியது. அது போல் மற்றொரு உளவுத் துறை அதிகாரி கூறுகையில் கிம்மின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வது அத்தனை சுலபமில்லை. அந்த நாட்டில் அதிபர் தொடர்பான ரகசியங்களை ஒருரும் கசியவிடமாட்டார்கள் என தெரிவித்தார். பின்னர் அண்மைக்காலமாக வடகொரியாவில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற எந்த வித நடவடிக்கையும் தெரியவில்லை என அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications