"நீல டிராகன்கள்.." நாடு முழுக்க ஒரே குழப்பம்.. உடனே பதறிய ஸ்பெயின் அதிகாரிகள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு கடற்கரைகளிலும் நீல டிராகன் படையெடுத்துள்ளது. இதனால் மக்கள் யாருக்கும் கடல் பக்கமே செல்ல வேண்டாம் எனச் சொல்லி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதென்ன நீல டிராகன்.. இதற்காக ஏன் இந்தளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை ஸ்பெயின் பிறப்பித்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உலகின் அழகிய கடற்கரைகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கிறது. அங்குள்ள அழகிய கடற்கரைகளைச் சுற்றிப் பார்க்க, உலகெங்கிலும் உள்ள பயணிகளின் ஸ்பெயினுக்குச் செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஸ்பெயின் எதிர்பாராத ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதாவது ஸ்பெயினில் கொடூரமான பாய்சன் கொண்ட கடல்வாழ் உயிரினமான ப்ளூ டிராகன் படையெடுத்திருக்கிறது. இதனால் அங்குள்ள பல சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

Spain Shut Down beaches as Venomous Blue Dragon Known as Ocean Most Beautiful Killers found on ocean

நீல டிராகன்

ஸ்பெயினின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குவார்டமார் டெல் செகுராவின் அழகான கடற்கரைகள், "நீல டிராகன்கள்" எனப்படும் க்ளாக்கஸ் அட்லாண்டிகஸ் (Glaucus atlanticus) உயிரினங்கள் மொத்தமாகத் திரண்டுள்ளன. இந்தச் சிறிய, பளபளக்கும் நீலக் கடல் நத்தைகள் ஆபத்து இல்லாதது போலத் தோன்றினாலும், இவை கடிக்கும் போது கடுமையான வலி, குமட்டல் மற்றும் அலர்ஜி ஏற்படும்.

இது குறித்து குவார்டமார் போலீசார் தங்கள் பேஸ்புக் பக்கத்தில், "நீல டிராகன் (க்ளாக்கஸ் அட்லாண்டிகஸ்) திடீரெனப் படையெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி மறு அறிவிப்பு வரும் வரை அனைத்துக் கடற்கரைகளிலும் நீந்த தடை செய்துள்ளோம். கடற்கரை அருகே உள்ள மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளையும் இந்த வழிகாட்டுதல்களை மதிக்குமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், கடற்கரையில் இந்த உயிரினங்கள் காணப்பட்டால் அதை நேரடியாகத் தொட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

விஷம்

அதேபோல குவார்டமார் டெல் செகுராவின் மேயர் ஜோஸ் லூயிஸ் சேஸும் இதைக் கருத்தை முன்வைத்திருக்கிறார். நீல டிராகன் கடல் நத்தை விஷம் கொண்டது என்பதால் அதைத் தொட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். கடற்கரையில் அவை காணப்பட்டால் கையுறைகளுடன் கூட இவற்றைத் தொட வேண்டாம் என்றும் கவனமாக இருக்கும்படியும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை எதிர்பாராத விதமாக அது கடித்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாகக் கடித்த இடத்தை உப்புநீரில் கழுவி, மருத்துவ உதவியை நாடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நீல டிராகன் என்றால் என்ன?

பழங்காலக் கதைகளில் வரும் உயிரினத்தை போலவே இருப்பதால் இந்த நத்தைக்கு நீல டிராகன் என்று பெயர் வந்தது. சுமார் 3 சென்டிமீட்டர் (1.2 அங்குலம்) நீளமுள்ள ஒரு சிறிய கடல்வாழ் நத்தை இதுவாகும்.. அவை போர்த்துகீசிய மனிதன்-ஓ-போர் (Portuguese man o' war) உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட சிறு உயிரினங்களைச் சாப்பிடும். இதனால் இந்த நத்தையின் உடலிலும் விஷம் இருக்கும். இதனால் ஒரு முறை அந்த நத்தை கடித்தாலும் கூட பெரிய பெரிய விலங்குகள் கூட முடங்கிவிடும். அந்தளவுக்கு இந்த நத்தை ஆபத்தான விஷத்தைக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை தேவை

மத்திய தரைக் கடலில் நீல டிராகன்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் இவை அதிகம் காணப்படுகின்றன. அங்கு இவை கடல் நீரோட்டங்கள் மற்றும் காற்றின் மூலம் அடித்துச் செல்லப்படுகின்றன. அப்போது மனிதர்களுடன் எதிர்பாராத விதமாகத் தொடர்பு ஏற்படும்போது அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+