திடீர் திடீரென நடுங்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா.. சர்வதேச உளவு அமைப்புகள் உஷார்!
பெர்லின்: ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மருத்துவ கோப்புகளை பெற வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் துடியாய் துடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் அதிபரான ஏஞ்சலா, கடந்த சில வாரங்களில் இரண்டு முறை பொது வெளியில், தனது கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடினார். இது விவாதப் பொருளாக மாறியது.
ஜூன் 18ம் தேதி உக்ரேனிய அதிபர், வோலோடிமைர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது ஏஞ்சலா மெர்க்கல் தடுமாற்றமடைந்தார். நீர்ச்சத்து குறைபாடால் (ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சொன்ன காரணம்) அவர் நடுக்கமடைவதாக கூறப்பட்டது. ஒரு சில கப் தண்ணீரைக் குடித்தபின் மீண்டும் அவர் தெம்பானார்.

ஜி20 உச்சி மாநாடு
ஆனால் ஜி 20 உச்சிமாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருந்தபோது, ஜூன் 27 அன்று மீண்டும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டது. கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நடுக்கத்தை அவர் குறைத்ததை மீடியாக்கள் கவனித்தன. இதையடுத்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில், நிருபர்களிடம், "மன அழுத்தத்தால்" சற்று நடுக்கம் ஏற்பட்டது என்றும், அது "தோன்றியதைப் போலவே மறைந்துவிடும்" என்றும் ஏஞ்சலா மெர்க்கல் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த உடல் நடுக்கம் பற்றி தகவல் தெரிவித்து, மருத்துவ உதவியை நாடினாரா என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார் அவர்.

உளவாளிகள்
இதையடுத்து, கடந்த ஜூன் 30 அன்று, பிரிட்டிஷ் செய்தித்தாள் 'தி சண்டே டைம்ஸ்', ஏஞ்சலா மெர்க்கல் மருத்துவ நிலையைக் கண்டுபிடிப்பதில் வெளிநாட்டு உளவாளிகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறி ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரம்பியல் பிரச்சினையா
"ஜெர்மன் அதிபர் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக ஒரு மேற்கத்திய புலனாய்வு அமைப்பு நம்புகிறது", என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜூன் 28 அன்று, ஜெர்மனி பத்திரிக்கையான பில்ட், ஏஞ்சலா மெர்க்கலின் தனிப்பட்ட மருத்துவக் கோப்பை பெற, முயற்சிக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

பேச மறுக்கும் அதிபர்
ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற நாட்டு அரசுகள், ஏஞ்சலா மெர்க்கல் உடல்நிலை குறித்து பலத்த சந்தேகத்தோடு இருப்பதாகவும், ஊடகங்களுடன் வெளிப்படையாக பேச ஏஞ்சலா மெர்க்கல் மறுத்துவருவதை அந்த அரசுகள் கவனித்துள்ளன என்றும் பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு
ஆனால், ஏஞ்சலா மெர்க்கல் உடல்நலம் பற்றிய மருத்துவ குறிப்புகள், ஜெர்மனியில் எங்காவது "ராணுவ பாதுகாப்பில்" வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்தக் கட்டுரை மேலும் கூறியுள்ளது. அக்டோபர் 2018 இல், ஜெர்மன் அதிபரானார், ஏஞ்சலா மெர்க்கல். அவர் பதவிக்காலம் 2021 இல் முடிவடைகிறது. அதுவரை இந்த பதவியை ஏஞ்சலா மெர்க்கல் திறம்பட கையாள முடியுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications