மக்கள் கூட்டத்தில் பாய்ந்த ரேஸ் கார்! 8 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி.. இலங்கையில் பகீர் விபத்து
கொழும்பு: இலங்கையில் கார் பந்தயத்தின் போது அரங்கேறிய மிக மோசமான விபத்தில் 8 வயது சிறுமி உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கே பலரும் கார் என்றாலே பிடிக்கும். அதுவும் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஓடும் கார் ரேஸ்களுக்கு தனியாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமாக இருக்கிறார்கள். உலகெங்கும் பல்வேறு பெயர்களில் இந்த கார் ரேஸ் தொடர்ச்சியாக நடைபெறும்.

இந்த கார் ரேஸ்களின் போது மிகவும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும். இருப்பினும், அதையும் தாண்டி சில சமயம் விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு மிக மோசமான விபத்து தான் இலங்கையில் அரங்கேறியுள்ளது.
கார் விபத்து: ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024 என்ற கார் ரேஸ் இன்று பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்போது தான் மோசமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து ஒட்டுமொத்த கார் ரேஸையும் சோகமானதாக மாற்றிவிட்டது. ரேஸில் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்த மக்களிடையே பாய்ந்தது.

இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவ என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து நடந்த போது முதலில் 6 பேர் உயிரிழந்தது உறுதியானது. படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மிக மோசம்: அவர்களில் ஒருவரது நிலை மிக மோசமாக இருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கார் ரேஸில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்தவர்கள். மேலும், இந்த விபத்தில் 8 வயது சிறுமியும் மரணமடைந்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
பலர் காயம்: கார் அதிவேகத்தில் மக்கள் கூட்டத்தில் பாய்ந்ததில் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மிக மோசமான விபத்தைத் தொடர்ந்து அந்த கார் பந்தயம் இப்போது தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications