தமிழர்களுடன் பொங்கல் விழாவில் பங்கேற்ற இலங்கை அதிபர்! இதே நட்பு மீனவர்கள் விஷயத்திலும் நீடிக்கனும்!
கொழும்பு: உலகம் முழுவதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் தமிழர்களுடன் சேர்ந்து, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். எல்லாம் ஓகேதான், ஆனால் இதே நட்பு மீனவர்கள் விவகாரங்களிலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கும் இலங்கைக்குமான உறவு சுமூகமாக இல்லை. சமீபத்தில் கூட, நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக 10 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

முதலமைச்சர் கடிதம்
அக்கடிதத்தில், அறுவடைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீளர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்கள் தொடர்பாகவும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
பொங்கல் திருநாள்
13-01-2025 அதிகாலையில் இயந்திரக்கப்பட்ட மீன்பிடி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இராபதாதபரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டு மீளர்கள் இது போன்று தொடர்ந்து கைது செய்பப்படுவதும் அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்க படுவதும் மிகுந்த கவலை அளிப்பதாக அவர் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசு
மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட இதுவரை மொத்தம் 83 மீனவர்களும் 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கை வசம் உள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையிளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.
இதே நட்பு நீடிக்குமா?
இப்படி இருக்கையில்தான் தமிழர்களுடன் சேர்ந்து, அதிபர் திசநாயக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் திசநாயக்க பங்கேற்றிருக்கிறார். எல்லாம் ஓகேதான், ஆனால் இதே நட்பு மீனவர்கள் விவகாரத்திலும் நீடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்கள் கைது விஷயத்தில், இரு தரப்பிலும் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications