மரணத்திற்கு முன்பு ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார்.. தடயவியல் அறிக்கை
நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார் என அவரது ரத்தப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார் என அவரது ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கையை துபாய் அரசு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளது.

சந்தேகம் இல்லை
அதில் ஸ்ரீதேவி ஹோட்டல் குளியல் அறையில் இருந்த பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீதேவி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தப்பரிசோதனை
ஸ்ரீதேவி மரணத்தில் குற்றநோக்கமோ சதிச்செயலோ ஏதுமில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீதேவி ரத்தப்பரிசோதனை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபோதையில் மரணம்
அதில் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனால் மதுபோதையில் பாத் டப்பில் மூழ்கி அவர் உயிரிழந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications